கற்போம் எழுதுவோம்
தேர்வுகள் தள்ளிவைப்பு – கல்வி
டிவி வழியே பாடம்
தமிழகத்தில் உள்ள 15 வயதுக்கு மேற்பட்ட
அடிப்படை கல்வி அறிவு
பெறாதவர்களுக்கு தமிழக
அரசு மற்றும் மத்திய
அரசு சார்பில் கற்போம்
எழுதுவோம் திட்டத்தின் மூலம்
அடிப்படை கல்வி அறிவு
பயிற்றுவிக்கப்படுகிறது. இந்த
திட்டத்திற்காக மையங்கள்
அமைத்து அங்கு பயனாளர்கள் வகுப்புகளில் கலந்து
கொள்ளும் வகையில் வசதிகள்
செய்யப்பட்டுள்ளது. தன்னார்வலர்கள் மூலம் இவர்களுக்கு பாடங்கள்
கற்பிக்கப்படுகிறது. வழக்கமாக
மார்ச், ஏப்ரல் மாதங்களில் தேர்வுகள் நடத்தப்பட்டு விடும்.
தற்போது
CORONA பரவல் அச்சம்
காரணமாக தேர்வுகளை மே
16ம் தேதி நடத்த
இருப்பதாக பள்ளிசாரா மற்றும்
வயது வந்தோர் கல்வி
இயக்கம் அறிவித்திருந்தது. தற்போது
அதன் இயக்குனர் ராமேஸ்வர
முருகன் அனைத்து மாவட்ட
கல்வி அதிகாரிகளுக்கும் அறிக்கை
ஒன்றை அனுப்பியுள்ளார். அதில்,
மத்திய, மாநில அரசுகளின்
நிதி பங்களிப்பில் இந்த
திட்டம் நடப்பு ஆண்டில்
ஜூலை மாதம் வரை
நீட்டிக்கப்டுகிறது.
மே
16ம் தேதி நடக்க
இருந்த இறுதி தேர்வுகள்
கொரோனா பரவல் காரணமாக
மறு அறிவிப்பு வரும்
வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மீண்டும்
தேர்வு நடத்தும் வரை
வழங்கப்பட்டுள்ள வினா,
விடைத்தாள் கைடுகள், பேணா,
வருகைப்பதிவு போன்றவை
அனைத்தும் முத்திரையிட்டு பாதுகாப்பாக வைக்க வேண்டும். மேலும்,
பயனர்களுக்கு கல்வி
டிவி வழியே மாலை
7 மணி முதல் 30 நிமிடங்கள் வீடியோ பாடங்கள் நடத்த
வேண்டும் என்றும் அதில்
கூறப்பட்டுள்ளது.