சிறந்த திருநங்கைக்கான விருது விண்ணப்பங்கள் வரவேற்பு
விழுப்புரம் கலெக்டர் மோகன் செய்திக்குறிப்பு:
திருநங்கைகளை சிறப்பிக்கும் வகையில்
2021-2022ம் அண்டுக்கான சிறந்த
திருநங்கைக்கான விருது
தமிழக முதல்வரால் வழங்கப்பட
உள்ளது. இவ்விருது பெறும்
சாதனையாளருக்கு ஒரு
லட்சம் ரூபாய் காசோலை
மற்றும் பாராட்டு சான்றிதழ்
வழங்கப்படும்.இவ்விருது
பெற தகுதிகளாக அரசாங்கத்தின உதவி பெறமால் தானாக
சுயமாக வாழ்க்கையில் முன்னேறி
இருக்க வேண்டும். குறைந்தது
5 திருநங்கைகளுக்காவது அவர்கள்
வாழ்க்கையில் முன்னேற
உதவியிருக்க வேண்டும்.
திருநங்கைகள் நல வாரியத்தில் உறுப்பினராக இருக்கக் கூடாது.தகுதியான
நபர்கள் https://awards.tn.gov.in
என்ற இணையதளம் மூலம்
கடந்த 17 முதல் வரும்
28ம் தேதி வரை
விண்ணப்பிக்கலாம்.உரிய
காலத்திற்குள் பெறப்படாத
விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும். விருது பெற
தகுதியுள்ளவர் இதற்கென
தமிழக அரசால் நியமிக்கப்பட்ட தேர்வு குழுவால் தேர்வு
செய்யப்படுவர்.
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google

