சிறுபான்மையின மக்கள்
விலையில்லா தையல் இயந்திரம்
பெற விண்ணப்பிக்கலாம்
சிறுபான்மையின சமூகத்தைச் சோந்த மக்கள்
விலையில்லா தையல் இயந்திரம்
பெற விண்ணப்பிக்கலாம் என
மாவட்ட ஆட்சியா் ஜி.எஸ்.சமீரன்
தெரிவித்துள்ளார்.
இது தொடா்பாக, கோவை மாவட்ட
வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
2021 – 2022ம்
ஆண்டுக்கான மானியக் கோரிக்கையில், சிறுபான்மையின சமூகத்தைச் சோந்த மக்களின் பொருளாதார
நிலையில் திட்டமிடப்பட்ட முன்னேற்றத்தை அடைவதற்காகவும், அவா்களின்
வாழ்க்கைத் தரத்தை உயா்த்தவும் விலையில்லா மின் மோட்டாருடன் கூடிய தையல் இயந்திரம்
வழங்கிட உத்தரவிடப்பட்டுள்ளது.
எனவே,
கோவை மாவட்டத்தில் உள்ள
சிறுபான்மையின சமூகத்தைச் சோந்த இஸ்லாமியா்கள், கிறிஸ்தவா்கள், சீக்கியா்கள், புத்த
மதத்தினா், பார்ஸிகள் மற்றும்
ஜெயின் இனத்தைச் சோந்த
பயனாளிகள் இதற்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரா்கள், தையல்
கலைப் பயின்றவராக இருத்தல்
வேண்டும் மற்றும் தையல்
கலைப் பயின்ற்கான உரிய
சான்றிதழை சமா்ப்பிக்க வேண்டும்.
ஆண்டு
வருமான உச்ச வரம்பு
ரூ. 1 லட்சமாக இருத்தல்
வேண்டும். வயது வரம்பு
20 முதல் 45 வயதுக்குள் இருத்தல்
வேண்டும். கைம்பெண் மற்றும்
கணவனால் கைவிடப்பட்டவா்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். இந்தத்
திட்டத்தின் கீழ் பயன்பெற
விரும்புவோர், கோவை
மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் இரண்டாம் தளத்தில் அமைந்துள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும்
சிறுபான்மையினா் நல
அலுவலகத்தில் சான்றுகளுடன் விண்ணப்பம் அளிக்கலாம்.
சந்தேகங்கள் இருந்தால், 0422 – 2300404 என்ற
தொலைபேசி எண்ணைத் தொடா்பு
கொள்ளலாம்.
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google

