MBA.,
MCA.,
சேர்க்கை அண்ணா பல்கலை
அறிவிப்பு
தொலைநிலை
கல்வியில் MBA.,
MCA.,
உள்ளிட்ட படிப்புகளுக்கான மாணவர்
சேர்க்கையை அண்ணா பல்கலை
அறிவித்துள்ளது.அண்ணா
பல்கலையின் தொலைநிலை கல்வி
பிரிவில் இளநிலை மற்றும்
முதுநிலை பட்டப் படிப்புகள் நடத்தப்படுகின்றன.
இதன்படி
MBA., MCA., MSc.,
ஆகிய முதுநிலை படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்கான அறிவிப்பு
வெளியிடப்பட்டுள்ளது.
MBA., படிப்பில் பொது
மேலாண்மை தொழில்நுட்பம் சந்தைப்படுத்துதல் மனிதவளம் நிதி
சேவை மருத்துவ சேவை
சுற்றுலா மற்றும் இயக்க
மேலாண்மை என எட்டு
வகை பாடப்பிரிவுகளில் மாணவர்கள்
சேர்க்கப்படுகின்றனர்.
பிளஸ்
2 தேர்ச்சிக்கு பின்
பட்டப் படிப்பு படித்தவர்கள் எந்த நுழைவு தேர்வும்
இன்றி MBA.,
படிப்பில் சேரலாம். எம்.எஸ்சி.யில்
கணினி அறிவியல் பாடப்பிரிவு நடத்தப்படுகிறது.
MCA.,வில் சேர இந்த
மாதம் 27ல் அண்ணா
பல்கலையின் தொலைநிலை கல்வி
இயக்குனரகம் நடத்தும் நுழைவு
தேர்வில் தேர்ச்சி பெற
வேண்டும்.இந்த படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கைக்கு ஆன்லைன்
வழி விண்ணப்ப பதிவு
துவங்கியுள்ளது. வரும்
25ம் தேதிக்குள் விண்ணப்பங்களை பதிவு செய்யலாம்.
கூடுதல்
விபரங்களை www.annauniv.edu/
என்ற இணையதளத்தில் தெரிந்து
கொள்ளலாம்.