தமிழ் – ஆறாம் வகுப்பு – இயல் – 1 (2.0 தமிழ்க்கும்மி) ஒரு வரி வினா விடைகள்
நல்ல பயிற்சி நிச்சயமாக வரவிருக்கும் TNPSC தேர்வுகளுக்கு உதவும். நீங்கள் அடைய நினைக்கும் இலக்கை அடையும் வரை ஒருபோதும் கைவிடாதீர்கள். உங்கள் அரசு வேலையை அடைய எங்கள் வலைதளம் நிச்சயமாக வழிகாட்டும். TNPSC குரூப் 1, குரூப்2, குரூப் 4, TNUSRB கான்ஸ்டபிள் மற்றும் SI, TN வனம், ரயில்வே, வங்கி போன்ற அனைத்து அரசு தேர்வுகளுக்கு தேவையான அனைத்து நோட்ஸ்களும் நமது இணையதளத்தில் உள்ளது – Download Here
தமிழ் – ஆறாம் வகுப்பு – இயல் – 1 (தமிழ்க்கும்மி) ஒரு வரி வினா விடைகள்
1.”கொட்டுங்கடி கும்மி கொட்டுங்கடி இளங்
கோதையரே கும்மி கொட்டுங்கடி நிலம்” என்ற பாடலின் ஆசிரியர் யார்? மற்றும் நூல்?
ஆசிரியர்- பாவலரேறு பெருஞ்சித்திரனார்
நூல்-கனிச்சாறு
2.”வான்தோன்றி வலிதோன்றி நெருப்பு தோன்றி மண் தோன்றிமழை தோன்றி மலைகள் தோன்றி ஊன் தோன்றி உயிர் தோன்றி உணர்வு தோன்றி ஒளி தோன்றி ஒலி தோன்றி வாழ்ந்த அந்நாள் தேன் தோன்றியது போல மக்கள் நாவில் செந்தமிழே நீ தோன்றி வளர்ந்தாய் வாழி
“என்று தொடங்கும் பாடலின் ஆசிரியர் யார்?
வாணிதாசன்
3. பெருஞ்சித்திரனார் இயற்பெயர் என்ன?
துரை மாணிக்கம்
4.பெருஞ்சித்திரனார் சிறப்பு பெயர்?
பாவலரேறு
5. பெருஞ்சித்திரானர் எழுதிய நூல்கள் யாவை?
- நூறாசிரியம்
- உலகியல் நூறு
- கொய்யாகனி
- பாவியக்கொத்து
- எண்சுவை எண்பது
- கனிச்சாறு
- பள்ளிபறவைகள்
- மகபுகுவஞ்சி
6. பெருஞ்சித்திரனார் நடத்திய இதழ்கள் யாவை?
- தென்மொழி
- தமிழ்நிலம்
- தமிழ் சிட்டு
7. கனிச்சாறு எத்தனை தொகுதிகளாக வெளிவந்துள்ளது?
எட்டு
8. கனிச்சாறு ……….. நிறைந்த பாடல்களை கொண்டது?
தமிழ் உணர்வு
9. பெருஞ்சித்திரனார் பெற்றோர் யார்?
தந்தை: துரைசாமி, தாய்: குஞ்சம்மாள்
10. பெருஞ்சித்திரனார் பிறந்த ஊர்?
சேலம் மாவட்டம் சமுத்திரம்
11. பெருஞ்சித்திரனார் பிறந்த ஆண்டு?
1933
12. ஆழிப்பெருக்கு என்னும் சொல்லின் பொருள்?
கடல் கோள்
13. மேதினி என்னும் சொல்லின் பொருள்?
உலகம்
14. ஊழி என்னும் சொல்லின் பொருள்?
நீண்டதொரு காலப்பகுதி
15. உள்ளப்பூட்டு என்னும் சொல்லின் பொருள்?
உள்ளத்தின் அறியாமை
16. தாய் மொழியில் படித்தால் __ அடையலாம்?
மேன்மை
17. தகவல்தொடர்பு முன்னேற்றத்தால் __ சுருங்கிவிட்டது?
மேதினி
18. செந்தமிழ் என்னும் சொல்லை பிரித்து எழுத கிடைப்பது?
செம்மை+தமிழ்
19. பொய்யகற்றும் என்னும் சொல்லை பிரித்து எழுத கிடைப்பது?
பொய்+அகற்றும்
20. பாட்டு+இருக்கும் என்பதைச் சேர்த்து எழுத கிடைப்பது?
பாட்டிருக்கும்
21. எட்டு+திசை என்பதைச் சேர்த்து எழுத கிடைப்பது?
எட்டுத்திசை
22. எதிர்சொல் தருக.
- பல x சில
- முற்றும் x தொடரும்
- பொய் x மெய்
- அழிவு xஆக்கம்
உங்களிடம் உள்ள PDF Files PRINT வேண்டுமென்றாலும் தொடர்பு கொள்ளவும் (Whatsapp): +91 80720 26676 – 1 Page (50 Paise Only)
Follow @ Google: புதிய வேலைவாய்ப்பு செய்திகள் மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள் – Click Here to Follow