
200+ குப்தர்கள் பற்றிய முக்கிய வினா விடைகள்
குப்தர்கள் நாகரிகம் என்பது இந்திய வரலாற்றில் மிக முக்கியமானது, மற்றும் TNPSC மற்றும் அரசு தேர்வுகளில் அடிக்கடி கேட்கப்படும் ஒரு தலைப்பு ஆகும். இந்த தொகுப்பில், குப்தர்கள் பற்றிய 200+ முக்கிய வினா விடைகள் கொடுக்கப்பட்டுள்ளது, இது உங்களுக்கு தேர்வு தயாரிப்பில் உதவும்.
குப்தர்கள் நாகரிகம் தொடர்பான பிரபலமான கேள்விகள் மற்றும் வினா விடைகள் உள்ளடக்கிய இந்த தொகுப்பு, இந்திய வரலாறு மற்றும் பொதுதெரிவு பகுதிகளில் பலவீனங்களை சரிசெய்ய உதவும்.
இந்த வினா விடைகளின் சிறப்பம்சங்கள்:
- 📚 குப்தர்கள் நாகரிகம் பற்றிய விரிவான விளக்கங்கள்
- 📝 இந்திய வரலாறு மற்றும் பொதுவான அறிவு பகுதிகளில் பயனுள்ள கேள்விகள்
- 🎯 TNPSC, UPSC மற்றும் அரசு தேர்வுகளுக்கு முக்கியமான தகவல்கள்
- 💡 குப்தர்கள் ஆட்சியின் முக்கிய அம்சங்கள் மற்றும் தகவல்
- அலகாபாத் கல்வெட்டு யாருடைய காலத்தைச் சேர்ந்தது? சமுத்திரகுப்தர்
- குப்தர் காலத்தை சேர்ந்த அறுவை சிகிச்சை செய்முறையை பற்றி விளக்கிய முதல் இந்தியர் யார்? சுஸ்ருதர்
- பிதாரி தூண் கல்வெட்டு எந்த குப்தர் உடையது? ஸ்கந்த குப்தர்
- மதுரா பாறை கல்வெட்டு யாருடைய காலத்தைச் சேர்ந்தது? இரண்டாம் சந்திரகுப்தர்
- களிமண் முத்திரைத் பொறிப்பு புத்தர் காலத்தில் எங்கு கிடைத்தது? நாளந்தா பல்கலைக்கழகம்
- சாஞ்சி பாறை கல்வெட்டு எந்த குப்த அரசர் காலத்தைச் சேர்ந்தது? இரண்டாம் சந்திரகுப்தர்
- விசாகதத்தரின் இரு நூல்கள்? அ)தேவி சந்திரகுப்தம் ஆ)முத்ரா ராட்சசம்
- குப்த அரச வம்சத்தை நிறுவியவர் யார்? ஸ்ரீ குப்தர்
- நாணயங்களில் இடம்பெற்ற முதல் குப்த அரசரின் வடிவம் யாருடையது? ஸ்ரீ குப்தர்
- ஸ்ரீ குப்தருக்கு பின் ஆட்சிப்பொறுப்பை ஏற்ற அரசர் யார்? கடோத்கஜர்
- கல்வெட்டுகளில் மகாராஜா என்று குறிப்பிடப்படும் இரண்டு குப்த அரசர்கள் யார்? ஸ்ரீ குப்தர்,கடோத்கஜன்
- லிச்சாவி அரச குடும்பத்தைச் சேர்ந்த குமாரதேவியை மணந்த குப்த அரசர் யார்? முதலாம் சந்திரகுப்தர்
- 9 வட இந்திய சிற்றரசர்களை வென்ற குப்த அரசர் யார்? முதலாம் சந்திரகுப்தர்
- லிச்சாவி கன சங்கம் அமைந்த பகுதி எது? கங்கை நதிக்கும் நேபாள நாட்டிற்கும் இடைப்பட்ட பகுதி
- குப்த அரச வம்சத்தின் தலை சிறந்த அரசர் யார்? முதலாம் சமுத்திரகுப்தர்
- அலகாபாத் தூண் கல்வெட்டு யாருடைய காலத்தைச் சார்ந்தது? சமுத்திரகுப்தர்
- பிரயாகை மெய்க்கீர்த்தி (பிரசஸ்தி) கல்வெட்டில் இடம் பெற்றுள்ள வரிகள் யாருடையது? ஹரிசேனர்
- பிரசஸ்தி என்பதன் பொருள் என்ன? ஒருவரை பாராட்டி புகழ்வது
- பிரசிஸ்தி என்பது எவ்வகை சொல்? சமஸ்கிருதம்
- பல்லவ நாட்டு விஷ்ணுகோபனை தோற்கடித்த குப்த அரசர் யார்? சமுத்திரகுப்தர்
- தென்னிந்தியாவைச் சேர்ந்த 12 அரசர்களை கப்பம் கட்ட செய்த குப்த அரசர் யார்? சமுத்திரகுப்தர்
- குதிரைகளை பலியிடும் வேள்வி முறையை மீண்டும் நடைமுறைப்படுத்திய குப்த அரசர்? சமுத்திரகுப்தர்
- சமுத்திர குப்தரின் சமகால அரசர் யார்? இலங்கையைச் சேர்ந்த மேக வர்மன்
- விஷ்ணுவை வழிபட்ட குப்த அரசர்? சமுத்திரகுப்தர்
- தன்னை விக்ரமாதித்யன் என்று அழைத்துக் கொண்ட குப்த அரசர்? இரண்டாம் சந்திரகுப்தர்
- இரண்டாம் சந்திரகுப்தன் யாருடைய மகன்? சமுத்திரகுப்தர்
- குதுப்மினாருக்கு அருகே உள்ள இரும்புத்தூண் யாரால் உருவாக்கப்பட்டது? விக்ரமாதித்யா (இரண்டாம் சந்திரகுப்தர்)
- எந்த குப்த அரசருக்கு கீழ் நவரத்தினங்கள் என்றழைக்கப்பட்ட அவை இருந்தன? இரண்டாம் சந்திரகுப்தர்
- விக்ரமாதித்யனின் அவையை சேர்ந்த இரண்டு சமஸ்கிருத புலவர்கள்? 1) காளிதாசர் 2)ஹரிசேனர்
- அகராதியியலின் ஆசிரியர் யார்? அமரசிம்ஹர்
- இரண்டாம் சந்திரகுப்தரின் அவையிலிருந்த மருத்துவர் யார்? தன்வந்திரி
- விக்ரமாதித்யனின் அவையிலிருந்த ஜோதிடத்தை சேர்ந்த அறிஞர் யார்? காகபனகர்
- விக்ரமாதித்தனின் அவையை சேர்ந்த கட்டிடக்கலை நிபுணர் யார்? சன்கு
- இரண்டாம் சந்திரகுப்தரின் அவையிலிருந்த வானியல் அறிஞர் யார்? வராகமிகிரர்
- இரண்டாம் சந்திரகுப்தரின் அவையிலிருந்த இலக்கண ஆசிரியர் மற்றும் சமஸ்கிருத புலவர் யார்? வராச்சி
- இரண்டாம் சந்திர குப்தரின் அவையிலிருந்த மாய வித்தைக்காரர்? விட்டல் பட்டர்
- இரண்டாம் சந்திரகுப்தர்க்கு வழங்கப்பட்ட பட்டப்பெயர்கள் யாவை? விக்ரமாதித்தியர், நரேந்திர சந்திரர், சிம்ம சந்திரர், நரேந்திர சிம்மர், விக்ரம தேவராஜர், தேவ குப்தர், தேவர் ஸ்ரீ
- இரண்டாம் சந்திரகுப்தரை தொடர்ந்து அரியணையேறிய குப்த அரசர் யார்? முதலாம் குமார குப்தர்
- நாலந்தா பல்கலைக்கழகத்தை உருவாக்கிய குப்த அரசர்? முதலாம் குமார குப்தர்
- முதலாம் குமார குப்தர் யாருடைய மகன்? இரண்டாம் சந்திரகுப்தர்
- இரண்டாம் சந்திரகுப்தரின் ஆட்சிக்காலத்தில் வந்த பெளத்தத் துறவி யார்? சீனப்பயணி பாஹியான்
- கயா பாழடைந்து இருந்தது, கபிலவஸ்து காடாக இருந்தது. ஆனால் பாடலிபுத்திரத்தில் மக்கள் செல்வத்தோடும் செழிப்போடும் வாழ்ந்தனர் என்று யாருடைய குறிப்பில் இடம் பெற்றுள்ளது? சீனப்பயணி பாஹியான்
- குமார குப்தரையை தொடர்ந்து அரச பதவி ஏற்ற குப்த அரசர் யார்? ஸ்கந்த குப்தர்
- ஹுணர்களின் படையெடுப்பை வென்ற குப்த அரசர்? ஸ்கந்த குப்தர்
- மிகச் சிறந்த குப்த பேரரசர்களில் கடைசிப் பேரரசர் யார்? பாலாதித்யர்
- முதலாம் நரசிம்ம குப்தர் என்று அழைக்கப்பட்ட குப்த பேரரசர் யார்? பாலாதித்யர்
- மிகிரகுலருக்கு கப்பம் கட்டிவந்த குப்த அரசர்? பாலதித்யர்
- குப்தப் பேரரசின் அங்கீகரிக்கப்பட்ட கடைசி அரசர் யார்? விஷ்ணு குப்தர்
- குப்த அரசர்கள் எவ்வகை கோட்பாட்டினை நடைமுறைப்படுத்தினர்? தெய்வீக கோட்பாடு (அரச கடவுளின் பிரதிநிதி)
- குப்தர் காலத்தில் உயர் பதவியில் அமர்த்தப்பட்ட அதிகாரிகள் எவ்வாறு அழைக்கப்பட்டனர்? தண்டநாயகர், மகா தண்டநாயகர்
- குப்தப் பேரரசின் பிராந்தியங்கள் (மாநிலங்கள்) எவ்வாறு பிரிக்கப்பட்டன? தேசம் அல்லது முக்தி
- பிராந்தியங்களை நிர்வகித்த ஆளுநர்கள் எவ்வாறு அழைக்கப்பட்டனர்? உபாரிகா
- பிராந்தியங்களுக்கு கீழ் இருந்த பகுதிகள் எவ்வாறு வகைப்படுத்தப்பட்டன? விஷ்யா (மாவட்டங்கள்)
- கிராம அளவில் செயல்பட்ட அதிகாரிகள் எவ்வாறு அழைக்கப்பட்டனர்? கிராமிகா, கிராமதியாகஷா
- குப்தர் காலத்தில் இருந்த ராணுவ தளபதிகள் எவ்வாறு அழைக்கப்பட்டனர்? பாலாதிகிரிதா (காலாட் படையின் தளபதி ), மகாபாலாதிகிரிதா (குதிரைப் படையின் தளபதி ), தூதகா (ஒற்றர்களை வேவு பார்க்கும் அமைப்பு)
- அரச கருவூலத்தின் முக்கியத்துவத்தையும் வருமானத்திற்கான வழி முறைகளையும் குறிப்பிட்டுள்ள நீதிசாரம் என்ற நூல் யாரால் எழுதப்பட்டது? காமந்த கார்
- குப்தர் காலத்தில் எவ்வரி அரசின் முக்கிய வருவாயாக இருந்தது? நிலவரி
- குப்தர் காலத்தில்நிலங்கள் எத்தனை வகைப்படுத்தப்பட்டன? 5
- வேளாண்மைக்கு உகந்த நிலங்கள் எவ்வாறு அழைக்கப்பட்டன? ஷேத்ரா
- தரிசு நிலங்கள் எவ்வாறு அழைக்கப்பட்டன? கிலா
- வனங்கள் அல்லது காட்டு நிலங்கள் எவ்வாறு அழைக்கப்பட்டன? அப்ரஹதா
- குடியிருப்பதற்கு உகந்த நிலங்கள் எவ்வாறு அழைக்கப்பட்டனர்? வஸ்தி
- மேய்ச்சல் நிலங்கள் எவ்வாறு அழைக்கப்பட்டன? கபதசரகா
- ஓரிடத்திலிருந்து நிலையாக வணிகம் செய்பவர்கள் எவ்வாறு அழைக்கப்பட்டனர்? சிரேஸ்தி
- பல்வேறு இடங்களுக்கு சென்று வணிகம் செய்பவர்கள் எவ்வாறு அழைக்கப்பட்டனர்? சார்த்தவாகா
- நாளந்தா பல்கலைக்கழகம் எந்த நூற்றாண்டைச் சேர்ந்தது? ஐந்து மற்றும் ஆறாம் நூற்றாண்டு
- குப்தர்களுக்கு பிறகு கன்னோசியை சேர்ந்த எந்த அரசரின் கீழ் நாளந்தா பல்கலைகழகம் சிறப்புற்றது? ஹர்ஷர்
- நாளந்தா பல்கலைக் கழகத்தில் பல ஆண்டுகள் பெளத்த தத்துவத்தை படித்த சீன அறிஞர்? யுவான்சுவாங்
- நாளந்தா பல்கலைக்கழகத்தில் எத்தனை மகா பாடசாலைகள் மற்றும் மிகப்பெரிய நூலகங்கள் இருந்தன? 8,3
- நாளந்தா பல்கலைக்கழகம் யாரால் அழிக்கப்பட்டது? பக்தியார் கில்ஜி
- குப்தர்களின் நாணய அமைப்பு முறையை அறிமுகப்படுத்தியவர் யார்? சமுத்திரகுப்தர்
- குப்தர்களின் பொற்காசுகள் எவ்வாறு அழைக்கப்பட்டன? தினாரா
- இரண்டாம் சந்திரகுப்தரின் அரசியர் பெயர்கள்? குபேரநாகா,துருபசுவாமினி
- அஸ்வமேதயாகம் (குதிரைகளை பலி கொடுத்து செய்யப்படும் வேள்வி) நடத்திய குப்த அரசர்கள்? சமுத்திரகுப்தர், முதலாம் குமார குப்தர்
- கட்டுமான கோவில்களை முதன்முதலாக கட்டியவர்கள் யார்? குப்தர்கள்
- நாளந்தா மற்றும் சுல்தான் கஞ்ச்யில் உள்ள புத்தர் சிலையின் உயரங்கள்? 18 அடி, ஏழரை அடி
- குப்தர் காலத்தில் மக்களால் பேசப்பட்ட மொழி மற்றும் அலுவலக மொழி? பிராகிருதம் மற்றும் சமஸ்கிருதம்
- அஷ்டதியாயிஎன்ற நூலை எழுதியவர் யார்? பாணினி
- மகா பாஷ்யம் என்ற நூலை எழுதியவர் யார்? பதஞ்சலி
- வங்காளத்தைச் சேர்ந்த சந்திரோகோமியா என்னும் பெளத்த அறிஞர் எழுதிய இலக்கண நூல்? சந்திர வியாகரணம்
- காளிதாசர் இயற்றிய நாடக நூல்கள்? சாகுந்தலம், மாளவிகாக்னிமித்ரம், விக்ரமோர்வசியம்
- காளிதாசர் இயற்றிய சிறப்புமிக்க நூல்கள்? மேகதூதம், ரகுவம்சம், குமாரசம்பவம், ரிதுசம்காரம்
- சூரிய சந்திர கிரகணங்களுக்கான உண்மை காரணங்களை விளக்கி சூரிய சித்தாந்தம்’ என்னும் நூலை எழுதியவர் யார்? ஆரியபட்டர்
- குப்தர் காலத்தைச் சேர்ந்த ஆயுர்வேதத்தில் சிறந்து விளங்கிய மருத்துவர் யார்? தன்வந்திரி
- யாருடைய காலம் பண்பாட்டு மறுமலர்ச்சியின் காலம் செவ்வியல் கலைகளின் காலம் என அழைக்கப்படுகிறது? குப்தர்களின் காலம்
- நீதிசாரம் (தர்ம சாத்திரம்) யாரால்எழுதப்பட்டது? காமந்தகார்
- விசாகதத்தரின் இரு நூல்கள்? அ) தேவி சந்திரகுப்தம் ஆ) முத்ராராட்சம்
- சீன பயணி பாகியான் யாருடைய காலத்தில் இந்தியாவிற்கு வந்தார்? 2-ம் சந்திரகுப்தர்
- மெஹரோலி இரும்பு தூண் கல்வெட்டு யாருடைய சாதனைகளை குறிக்கிறது? முதலாம் சந்திரகுப்தர்
- அலகாபாத் தூண் கல்வெட்டு யாருடைய ஆட்சியை விளக்குகிறது? சமுத்திரகுப்தர்
- அலகாபாத் தூண் கல்வெட்டு யாரால் பொறிக்கப்பட்டது? ஹரிசேனர்
- அலகாபாத் தூண் கல்வெட்டு எந்த வரி வடிவத்தில் எத்தனை வரிகளை கொண்டது? நாகரி வடிவம் (சமஸ்கிருதம்) 33 வரி
- முதலாம் சந்திரகுப்தரின் மனைவி குமார தேவி எந்த மரபைச் சேர்ந்தவர்? லிச்சாவி
- லிச்சாவி என்பதன் பொருள்? லிச்சாவி என்பது வடக்கு பீகாரில் இருந்த பழமையான கனசங்கம் இது கங்கைக்கும் நேபாள தெராய்க்கும் இடைப்பட்ட பகுதி
- குப்த வம்சத்தின் முதல் அரசர்? ஸ்ரீ குப்தர்
- முதலாம் சந்திரகுப்தரின் காலம்? (319-335)
- மகாராஜா அதிராஜா என்ற பட்டத்தை பெற்றவர் யார்? முதலாம் சந்திரகுப்தர்
- முதலாம் சந்திரகுப்தரின் தந்தை? கடோத்கஜர்
- சமுத்திரகுப்தர் மெளரிய பரம்பரையில் வந்ததாக கூறிய சான்று எது? அசோகரின் கல்வெட்டு
- கங்கைச் சமவெளியின் மேற்கு பகுதியில் ஒன்பது அரசர்களை வென்றவர் யார்? சமுத்திரகுப்தர்
- சமுத்திர குப்தரின் எந்த கல்வெட்டு அவர் பிரயாகைக்கு மேற்கே மதுரா வரையுள்ள செழிப்பான நிலங்கள் முழுவதையும் கைப்பற்றினார் என்று கூறுகிறது? அலகாபாத் (பிரயாகை) கல்வெட்டு
- தெய்வ புத்திர சகானுசாகி என்பது? ஒரு குஷாண பட்டம்
- யாருடைய காலத்தில் இலங்கை அரசன் மேகவர்மன் பரிசுகளை அனுப்பி கயாவில் பெளத்த மடம் கட்ட அனுமதி கோரினார்? சமுத்திரகுப்தர்
- சமுத்திர குப்தரின் ஆட்சிக்காலம்? 40 ஆண்டுகள்
- கவிராஜா என்ற பட்டத்தைப் பெற்றவர் யார்? சமுத்திரகுப்தர்
- வசுபந்து என்ற புத்தக அறிஞரை ஆதரித்தவர்? சமுத்திரகுப்தர்
- ஹரிசேனர் என்ற அறிஞரை ஆதரித்த குப்தரசர்? சமுத்திரகுப்தர்
- யாருடைய காலத்தில் வீணை வாசிப்பது போன்ற நாணயங்கள் பொறிக்கப்பட்டது? சமுத்திரகுப்தர்
- இரண்டாம் சந்திரகுப்தரின் ஆட்சிக்காலம்? 40 ஆண்டுகள்.
- இராம குப்தர் உடன் வாரிசுரிமைக்கு போராடி ஆட்சிக்கு வந்தவர் யார்? இரண்டாம் சந்திரகுப்தர்
- விக்ரமாதித்யன் என்று அழைக்கப்பட்டவர்? இரண்டாம் சந்திரகுப்தர்
- பாடலிபுத்திரத்தை தலைநகரமாக கொண்டவர்? இரண்டாம் சந்திரகுப்தர்
- 400 ஆண்டுகளாக ஆட்சி செய்து வந்த சாக அரசர்களை படையெடுப்பின் மூலம் வென்றவர் யார்? இரண்டாம் சந்திரகுப்தர்
- வாகட இளவரசருக்கு மகள் பிரபாவதி திருமணம் செய்து கொடுத்தவர்? இரண்டாம் சந்திரகுப்தர்
- விக்ரமன், தேவ குப்தன், தேவராஜன், சிம்ஹவிக்ரமன், விக்ரமாதித்தன் சாகரி ஆகிய பெயர்கள் யாரைக் குறிக்கும்? இரண்டாம் சந்திரகுப்தர்
- இரண்டாம் சந்திரகுப்தரின் அவையில் கலை இலக்கியம் அறிவியல் போன்ற துறைகளில் சிறந்து விளங்கியவர்கள் எவ்வாறு அழைக்கப்பட்டனர்? நவரத்தினங்கள்
- அகராதி உருவாக்கியவர் யார்? அமர சிம்மர்
- வெள்ளி நாணயங்களை வெளியிட்ட முதல் குப்த? இரண்டாம் சந்திரகுப்தர்
- இரண்டாம் சந்திரகுப்தர் க்குப்பின் ஆட்சி செய்தவர்? முதலாம் குமார குப்தர்
- நாளந்தா பல்கலைக் கழகத்தை தோற்றுவித்தவர் யார்? குமார குப்தர்
- குப்த வம்சத்தின் கடைசி பேரரசர்? ஸ்கந்த குப்தர்
- குப்த வம்சத்தின் கடைசி அரசர்? விஷ்ணு குப்தர்
- விஷ்ணு குப்தரின் ஆட்சிக்காலம்? 540 முதல் 550 வரை
- யாருடைய ஆட்சிக்காலத்தில் குப்தப் பேரரசின் விரிவாக்கம் உச்சத்தை எட்டியது? இரண்டாம் சந்திரகுப்தர்
- மகா ராஜாதி ராஜா, பரம பட்டாரக, பரமேஸ்வர போன்ற பட்டங்களை கொன்றவர்கள் யார்? குப்தர்கள்
- அலகாபாத் கல்வெட்டுகளில் புருஷா (அனைவருக்கும் மேலானவர்) என்று கடவுளுடன் ஒப்பிட படுபவர் யார்? சமுத்திரகுப்தர்
- குமாரமாத்யா என்ற சொல் எத்தனை வைசாலி முத்திரைகளில் இடம்பெறுகிறது? 6
- அமாத்யாக்களில் மிக முக்கியமான பதவி எது? குமாரமாத்யா
- குமாரமாத்யா, சந்தி விக்கிரஹிகா, மகா தண்ட நாயகா பட்டங்களைப் பெற்றவர் யார்? ஹரிசேனர்
- மகா தண்ட நாயகாக துருவபூதியின் புதல்வர் யார்? ஹரிசேனர்
- அமைச்சர்களில் உயர் நிலையில் இருப்பவர்? மஹா சந்திர விக்ரஹா
- மகா அஸ்வபதி என்பதின் பொருள்? குதிரைப்படைத் தலைவர்
- குப்தர்களின் பேரரசு எவ்வாறு மாநிலங்களாக பிரிக்கப்பட்டிருந்தது? தேசம் அல்லது புக்தி
- மாநிலங்களை நிர்வகித்த ஆளுநர்கள் எவ்வாறு அழைக்கப்படுகின்றனர்? உபாரிகா
- மாவட்ட தலைமை நிர்வாக அதிகாரிகளையும் வாரிய அதிகாரிகளையும் நியமித்தவர்கள்? உபாரிகாக்கள்
- மூன்று உபாரிகளுக்கு மகாராஜா என்ற பட்டம் இருந்ததாக கூறுவது எது? தாமோதர் செப்பேடுகள்
- குப்தர் ஆண்டாக ஈரான் கல்வெட்டு குறிப்பிடுவது எது? 165
- லோக பாலா என்பது யாரை குறிப்பிடுகிறது? மாநில ஆளுநர்
- குப்தப் பேரரசின் மாநிலங்கள் எந்த அதிகாரியின் கீழ் மாவட்டங்களாக பிரிக்கப்பட்டன மற்றும் இவை எவ்வாறு அழைக்கப்படுகிறது? விஷ்யபதி, விஷ்வா:
- மாவட்ட மட்டத்திற்கு கீழ் உள்ள பல்வேறு விதமான நிர்வாக அலகுகள்? விதி, பூமி, பீடா, பதகா
- அஷ்ட குல அதிகாரனா என்பதன் பொருள்? 8 உறுப்பினர் கொண்ட குழு
- மாவட்ட அளவிலான காவல் துறை அலுவலகம் எவ்வாறு குறிப்பிடப்படுகிறது? தண்டபாஷிகா
- மகா பிரதிகாரா என்பதன் பொருள்? அரண்மனை காவலர்களின் தலைவர்
- கத்யதபகிதா என்பதன் பொருள்? அரச சமையல் அறை கண்காணிப்பாளர்
- துடகா என்றழைக்கப்பட்ட எந்த அமைப்பை குறிக்கிறது? ஒற்றர்கள் அமைப்பு
- அரசு கருவூலத்தில் முக்கிய வருவாய்கள், மூலவளங்கள் பற்றி குறிப்பிடும் நூல்? நீதி சாரா
- அரசு ஆவணங்களை பராமரித்த அதிகாரியின் பெயர்? அக்ஷபதலதிக்கிருதா
- இரணிய வெஷ்திஎன்பதன் பொருள் என்ன? கட்டாய உழைப்பு
- எந்த செப்பேடு அரசர் தான் நிலத்தின் ஒரே உரிமையாளர் என்று காட்டுகிறது? பஹார்பூர் செப்பேடு
- மாவட்டத்தின் நிலப் பரிமாற்றம் தொடர்பான ஆவணங்கள் அனைத்தையும் பாதுகாத்த அதிகாரி? உஸ்தபாலா
- பயிரிடக்கூடிய நிலத்தின் பெயர்? ஷேத்ரா
- தரிசு நிலத்தின் பெயர்? கிலா
- அப்ரஹதா என்பதன் பொருள்? காடு அல்லது தரிசு நிலம்
- குடியிருக்க தகுந்த நிலம் எவ்வாறு அழைக்கப்படுகிறது? வாஸ்தி
- அறக்கட்டளை போன்ற அமைப்பின் மூலம் நில மானியம் பெறும் முறை? நிவி தர்மா
- நிரந்தரமான அறக்கட்டளை? பெற்றவர் அதிலிருந்து வரும் வருவாயை பயன்படுத்திக் கொள்ளலாம் இது எவ்வகை நிலக்குத்தகை நிவி தர்ம அக்சயனா
- வருவாயை பயன்படுத்திக் கொள்ளலாம் ஆனால் அதை பிறருக்கு தானம் செய்ய முடியாது நிர்வாக உரிமையும் இல்லை இது எவ்வகை நிலக்குத்தகை? அப்ரதா தர்மா
- தரிசு நிலத்தை முதன்முதலாக சாகுபடி நிலமாக மாற்றுபவருக்குத் தரப்படும் உரிமை இந்த நிலத்திற்கு குத்தகை இருந்து விலக்கு அளிக்கப்பட்டது இது எவ்வகை நில குத்தகை? பூமி சித்ராயனா
- குப்தர் காலத்தில் நில கொடைகள் எத்தனை வகைப்படுத்தப்பட்டன? 3
- பிராமணருக்கு தரப்படும் நிரந்தரமான பரம்பரையாக வரக்கூடிய நிலமானியம் இதற்கு வரி கிடையாது இதன் பெயர்? அக்ரஹார மானியம்
- கோயில் மராமத்து, வழிபாடு ஆகிய பணிகளுக்காக பிராமணர்கள் வணிகர்கள் ஆகியோர்களுக்கு அளிக்கப்படும் மானியம்? தேவகிரகார மானியம்
- குப்தர்களுக்கு கீழிருந்த நிலப்பிரபுக்களுக்கு தரப்பட்ட மானியம் எவ்வாறு அழைக்கப்பட்டது? சமயசார்பற்ற மானியம்
- குப்தர் காலத்தில்குஜராத்தின் கிர்னார் மலையின் அடிவாரத்தில் இருந்த மிகப் புகழ்பெற்ற ஏரி? சுதர்சனா ஏரி
- குப்தர் காலத்தில் பாசனத்திற்கு உதவிய பந்தியா, கரா என்ற இருவகை அணைக்கரை பற்றி குறிப்பிடும் நூல் எது? நாரத ஸ்மிருதி
- விளைச்சலில் அரசன் பெறும் வழக்கமான ஆறில் ஒரு பங்கு வரியை குறிப்பிடும் வரி எது? பாகா வரி
- அரசருக்கு கிராமங்கள் அவ்வப்போது வழங்க வேண்டிய பழங்கள் விறகு பூக்கள் போன்றவை குறிப்பிடும் வரி? போகா வரி
- கிராமத்தினர் மீது குறிப்பிட்ட கால இடைவெளியில் விதிக்கப்படும் ஒரு வரி? கரா
- ஆரம்பத்தில் விருப்பப்பட்டு வழங்கப்பட்ட வழியாக இருந்து பின்னர் கட்டாய வழியாக மாற்றப்பட்டது இது ஒரு அடுக்கு முறை வரி? பலி வரி
- காவல் நிலையங்களின் பராமரிப்பிற்காக விதிக்கப்பட்ட காவல் வரியாக இருக்கலாம் அல்லது நீர் வழியாகவும் இருக்கலாம் எனினும் இது ஒரு கூடுதல் வரி அவ்வரி எது? உதியங்கா வரி
- எவ்வரி வசூலிக்கப்பட்டதற்காக அறிஞர்கள் மாறுபட்ட விளக்கங்களைத் தருகின்றனர்? உபரிகரா
- எவ்வரி தங்க நாணயங்கள் மீது விதிக்கப்படும் வரி என நேரடி பொருள் தரும் இது நடைமுறையில் குறிப்பிட்ட தானியங்களில் விளைச்சலின் ஒரு பங்கினை அரசின் பங்காக பொருளாகவே அளிக்கிறது? ஹிரண்யா
- காட்டுக்கும் ஆவிக்கும் செய்யவேண்டிய சடங்குகளுக்காக விதிக்கப்பட்ட பல்வேறு வரிகளின் பெயர் என்ன? வாத பூதா
- கலப்பை வைத்திருக்கும் ஒவ்வொரு உழவரும் கட்டவேண்டிய கலப்பை வரியின் பெயர் என்ன? ஹலிவகரா
- குப்தர் காலத்தில் வசூலிக்கப்பட்ட நுழைவு வரியின் பெயர் என்ன? சுல்கா வரி
- நிலப் பதிவின்போது விதிக்கப்படும் விற்பனை வரிகளின் பெயர் என்ன? கிளிப்தா, உபகிளிப்தா
- குப்தர் காலத்தில் இரும்பு படிகள் மற்றும் செம்பு படிகள் எங்கிருந்து பெருமளவில் தோண்டி எடுக்கப்பட்டன? பீகார் ராஜஸ்தான்
- குப்தர் கால ஆட்சியின் தென்பகுதியில் மிளகு ஏலம் ஆகியவற்றிற்கு புகழ் பெற்றிருந்தது என்பதை யாருடைய நூலின் மூலம் அறியலாம்? காளிதாசர்
- குப்தர்கால வணிகத்தில் பொதுவாக ஒரே இடத்தில் தங்கி இருப்பவர் எவ்வாறு அழைக்கப்படுகிறார்? சிரேஷ்டி
- லாபத்திற்காக ஊர்ஊராக சென்று வணிகம் செய்பவர்கள் எவ்வாறு அழைக்கப்பட்டனர்? சார்த்த வாகா
- வணிகக் குழுக்கள் வங்கிகளின் பங்கினை ஆற்றி யதாக குறிப்பிடும் கல்வெட்டு? மண்டசோர் கல்வெட்டு
- வங்கத்தின் தாமிரலிப்தி கிழக்கு கடற்கரையின் முக்கியமான வணிக மையம் என்று யார் குறிப்பிடுகிறார்? சீனப்பயணி பாஹியான்
- குப்தர்கள் அதிக எண்ணிக்கையில் எவ்வகை நாணயங்களை வெளியிட்டனர்? தங்க நாணயங்கள்
- குப்தர்கள் காலத்தில் எவ்வகை பாணியிலான கலைகள் வளர்ந்தன? நகரம், திராவிடம்
- குப்தர் கால குடைவரை கோவில்கள் காணப்படும் இடங்கள்? அஜந்தா, எல்லோரா, பாக் உதயகிரி
- சிவப்பு மட்பாண்டங்கள் யாருடைய காலத்தைச் சேர்ந்தவை? குப்தர் காலம்
- அஷ்ட தாயி என்ற நூல் யாரால் எழுதப்பட்டது? பாணினி
- மகாபாஷ்ய என்ற நூலை எழுதியவர் யார்? பதஞ்சலி
- சந்திர வியாகரணம் என்ற இலக்கண நூலை எழுதியவர்? சந்திரகோமியர்
- குப்தர்கால குறிப்பிடத்தக்க எழுத்தாளர்கள் யார்? ஆரிய தேவர், ஆரிய அசங்கர்
- குப்தர்கால அலுவலக மொழி? சமஸ்கிருதம்
- சமண ராமாயணத்தை எழுதியவர்? விமலா
- சாகுந்தலம் மாளவிகாக்னிமித்ரம் விக்ரமோர்வசியம் போன்ற புகழ்பெற்ற நாடகங்களை எழுதியவர் யார்? காளிதாசர்
- மகா விஹாரா என்று அழைக்கப்பட்டது எது? நாளந்தா
- 5-ஆம் நூற்றாண்டு நூற்றாண்டிலிருந்து 1,200 வரை புகழ்பெற்ற கல்வி சாலையாக இருந்தது எது? நாளந்தா பல்கலைக்கழகம் (பாதுகாக்கப்படும் உலகின் தொன்மையான சின்னம்)
- பக்தியார் கில்ஜியின் படைகளால் நாளந்தா சூறையாடப்பட்டு அழிக்கப்பட்ட வருடம் எது? 1200
- நாளந்தா பல்கலைக்கழகத்தின் அகழ்வாய்வு ஆரம்பிக்கப்பட்ட வருடம்? 1915
- சுழியம், பதின்ம இலக்கு முறை யாருடைய காலத்தில் கண்டுபிடிக்கப்பட்டது? குப்தர்கள் காலம்
- சூரிய சித்தாந்தம் என்ற நூலை எழுதியவர் யார்? ஆரியபட்டர்
- கணிதம் கோணவியல் அல்ஜீப்ரா ஆகியவற்றை பேசும் நூல் எது? ஆரிய பட்டியம்
- பிருஹத் சம்ஹிதா என்ற நூலை எழுதியவர் யார்? வராகமிகிரர்
- பிரம்மகுப்தரின் நூல்கள்? பிரம்மஸ்புத சித்தாந்தா, கண்ட காத்யகா
- மருந்துகள் மருந்துகள் தயாரிக்கும் முறை பற்றி குறிப்பிடும் குப்தர்கால மருத்துவ நூல் எது? நவநனிதகம்
- குப்தர் காலத்தில் எழுதப்பட்ட விலங்குகளுக்கான மருத்துவ நூல் எது மற்றும் அதன் ஆசிரியர்: யார்? ஹஸ்த்யாயுர் வேதா
- குப்த வம்சத்தின் கடைசி அரசர் யார்? விஷ்ணு குப்தர்
- நிலப்பிரபுத்துவ துணைநிலை ஆட்சியாளர்கள் எவ்வாறு அழைக்கப்பட்டனர்? சமந்தா
இந்த 200+ குப்தர்கள் பற்றிய முக்கிய வினா விடைகள் TNPSC மற்றும் அரசு தேர்வுகளுக்கு பயனுள்ளதாக இருக்கும். இந்த வினா விடைகள் மூலம், நீங்கள் குப்தர்கள் ஆட்சியின் வரலாறு மற்றும் சிறந்த மன்னர்கள் பற்றிய உங்கள் அறிவை மேம்படுத்த முடியும்.
🌐 முக்கிய வலைதளம் மற்றும் சமூக ஊடகக் குழுக்கள்:
- 🌍 எங்களது அதிகாரப்பூர்வ வலைதளம்: Tamil Mixer Education
- 💬 WhatsApp குழு: Tamil Mixer Education WhatsApp Group
- 📢 Telegram: Jobs and Notes
- 📷 Instagram: Tamil Mixer Education Instagram
📂 PDF Collections:
- 📄 TNPSC Notes PDF Collection: TNPSC Notes PDF
- 📘 Test Series PDF Collection: Test Series PDFs
- 🗂️ Old Question Paper PDF Collection: Old Question Papers
- 🕉️ Hindu Aranilaiyathurai Notes PDF Collection: Hindu Aranilaiyathurai Notes
- 📚 All Exam Notes: All Exam Notes
🚀 200+ குப்தர்கள் பற்றிய முக்கிய வினா விடைகள் – பதிவிறக்கம் செய்து, உங்கள் தேர்வு தயாரிப்பை மேம்படுத்துங்கள்!