Join Whatsapp Group

Join Telegram Group

12th History – Lesson 15 – இரண்டாம் உலகப்போருக்குப் பிந்தைய உலகம் – Tamil Medium

By admin

Updated on:

 

12th History – Lesson 15 – இரண்டாம் உலகப்போருக்குப் பிந்தைய உலகம் – Tamil
Medium

I. சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்

1.1947இன் இறுதியில் கிழக்கு ஐரோப்பாவில் சோவியத் ரஷ்யாவின் செல்வாக்கிலிருந்து விடுபட்டிருந்த ஒரே நாடு …………….

.
கிழக்கு ஜெர்மனி

.
செக்கோஸ்லோவாக்கியா

.
கிரீஸ்

.
துருக்கி

விடை: . செக்கோஸ்லோவாக்கியா

 

2.கூற்று: ஸ்டாலின் சர்ச்சிலை ஒரு போர் விரும்பி என விமர்சித்தார்.

காரணம்:
கம்யூனிசத்திற்கு எதிராக மேற்கு ஐரோப்பிய நாடுகள் கூட்டு சேர வேண்டுமென சர்ச்சில் முன்னதாக அழைப்பு விடுத்திருந்தார்.

.
கூற்று, காரணம் இரண்டும்
சரி. காரணம் கூற்றை
விளக்குகிறது.

.
கூற்று காரணம் இரண்டும்
சரி. ஆனால் காரணம்
கூற்றை விளக்கவில்லை .

.
கூற்று சரி. காரணம்
தவறு.

.
கூற்று தவறு. காரணம்
சரி.

விடை: . கூற்று
காரணம் இரண்டும் சரி.
ஆனால் காரணம் கூற்றை
விளக்கவில்லை .

 

3.பனிப்போர்எனும் சொல்லை உருவாக்கியவர்

.
பெர்னாட் பரூச்

.
ஜார்ஜ் ஆர்வெல்

.
ஜார்ஜ் கென்னன்

.
சர்ச்சில்

விடை: . ஜார்ஜ்
ஆர்வெல்

 

4.கூற்று: மார்ஷல் திட்டத்தைடாலர் ஏகாதிபத்தியம்என சோவியத் வெளியுறவுத் துறை அமைச்சர் இகழ்ந்தார்.

காரணம்:
சோவியத்தின் கண்ணோட்டத்தில் மார்ஷல் திட்டமென்பது அமெரிக்காவின் செல்வாக்கைப் பரப்புவதற்கான சூழ்ச்சியே ஆகும்.

.
கூற்று, காரணம் இரண்டும்
சரி. காரணம் கூற்றை
விளக்குகிறது.

.
கூற்று காரணம் இரண்டும்
சரி. ஆனால் காரணம்
கூற்றை விளக்கவில்லை .

.
கூற்று சரி. காரணம்
தவறு.

.
கூற்று தவறு. காரணம்
சரி.

விடை: . கூற்று,
காரணம் இரண்டும் சரி.
காரணம் கூற்றை விளக்குகிறது.

 

5.மார்ஷல் உதவித் திட்டத்தின் குறிக்கோள் …………………….

.
ஐரோப்பியப் பொருளாதாரத்தை மறுகட்டுமானம் செய்வது

.
முதலாளித்துவத் தொழில்
முயற்சிகளைப் பாதுகாப்பது

.
ஐரோப்பாவில் அமெரிக்காவின் மேலாதிக்கத்தை நிறுவுவது

.
சோவியத் ரஷ்யாவிற்கு எதிராக
இராணுவக் கூட்டமைப்பை உருவாக்குவது

விடை: . ஐரோப்பியப் பொருளாதாரத்தை மறுகட்டுமானம் செய்வது

 

6.ட்ரூமன் கோட்பாடு …………… பரிந்துரைத்தது

.
கம்யூனிசம் பரவுவதைத் தடுப்பதற்கான நிதியுதவி

.
காலனிகளிலுள்ள கிளர்ச்சியாளர்களுக்கு ஆயுதங்கள் வழங்குவது

.
கிழக்கு ஐரோப்பிய நாடுகளின்
உள்விவகாரங்களில் தலையிடுவது

.
அமெரிக்கத் தளபதியின் தலைமையின்
கீழ் .நா
சபைக்கு நிரந்தரப் படையை
உருவாக்குவது

விடை: . கம்யூனிசம் பரவுவதைத் தடுப்பதற்கான நிதியுதவி

 

7.கீழ்க்காண்பனவற்றை காலவரிசைப்படி ஒழுங்கு செய்யவும்.

1) வார்சா
உடன்படிக்கை

2) சென்டோ

3) சீட்டோ

4) நேட்டோ

)
4 2 3 1

)
1 3 2 4

)
4 3 21

)
1 2 3 4

விடை: ) 4 2 3 1

 

8.…………….
பாக்தாத் உடன்படிக்கையின் குறிக்கோளாக இருந்தது.

.
மத்திய கிழக்கில் இங்கிலாந்தின் தலைமையைப் பாதுகாப்பது

.
அப்பகுதி சார்ந்த எண்ணை
வளங்களைச் சுரண்டுவது

.
கம்யூனிஸ்டுகளின் செல்வாக்கைத் தடுப்பது

.
ஈராக் அரசை வலிமை
குன்றச் செய்வது

விடை: . கம்யூனிஸ்டுகளின் செல்வாக்கைத் தடுப்பது

 

9.லெபனானில் அமெரிக்கா தலையிட்டதை ………….. எதிர்த்தது

.
துருக்கி

.
ஈராக்

.
இந்தியா

.
பாகிஸ்தான்

விடை: . ஈராக்

 

10.“மூன்றாம் உலகம்எனும் பதத்தை உருவாக்கியவர் …………… ஆவார்.

.
ஆல்பிரட் சாவே

.
மார்ஷல்

.
மோலோடோவ்

.
ஹாரி ட்ரூமன்

விடை: . ஆல்பிரட்
சாவே

 

11.பொருத்திப் பார்த்து, கீழே கொடுக்கப்பட்டுள்ள
விடைகளில் சரியானதைத் தேர்வு செய்க

. இந்தோனேசியா – 1. ஜவகர்லால் நேரு

.
எகிப்து – 2. டிட்டோம்

. கானா
– 3.
குவாமி நுக்ருமா

.யுகோஸ்லோவியா – 4. கமால்
அப்துல் நாசர்

. இந்தியா
– 5.
சுகர்னோ

.
5 3 4 2 1

. 1 3 2 4 5

.
5 4 3 2 1

.1
2 3 4 5

விடை: ) 5 4 3 2 1

 

12.அணிசேரா இயக்கத்தின் முதல் உச்சி மாநாடு ………….. ல் நடைபெற்றது

.
பெல்கிரேடு

.
பெய்ஜிங்

.
பாண்டுங்

விடை: . பெல்கிரேடு

 

13.கூற்று: பன்னாட்டு சங்கம் ஒரு தோல்வி என்பதை இரண்டாம் உலகப்போர் நிரூபித்தது.

காரணம்:
மற்றொரு போர் ஏற்படாவண்ணம் தடுக்க ஒரு சக்திவாய்ந்த அமைப்பை உருவாக்க இது வேண்டியதன் அவசியத்தை தலைவர்கள் உணர்ந்தனர்.

.
கூற்று, காரணம் இரண்டும்
சரி. காரணம் கூற்றை
விளக்குகிறது.

.
கூற்று காரணம் இரண்டும்
சரி. ஆனால் காரணம்
கூற்றை விளக்கவில்லை .

.
கூற்று சரி. காரணம்
தவறு.

.
கூற்று தவறு. காரணம்
சரி.

விடை: . கூற்று,
காரணம் இரண்டும் சரி.
காரணம் கூற்றை விளக்குகிறது.

 

14.ஐக்கிய நாடுகள் சபை 1945 அக்டோபர் 24இல் ……………. உருவானது.

.
100
உறுப்பினர்களுடன்

.
72
உறுப்பினர்களுடன்

.
51
உறுப்பினர்களுடன்

.
126
உறுப்பினர்களுடன்

விடை: . 51 உறுப்பினர்களுடன்

 

15.பின்வரும் கூற்றுகளில் எக்கூற்றுகள் சரியானவை?

கூற்று I: ஐக்கிய
நாடுகள் சபையின் தோற்றம்
பனிப்போரின் தொடக்கத்துடன் ஒருங்கே
நடைபெற்றது.

கூற்று II : பனிப்போர்
காலக்கட்டத்தில், போர்கள்
நிகழாமல் தடுப்பதில் .நா
சபை முக்கிய பங்காற்றியது.

கூற்று III: பாதுகாப்பு சபையின் நிரந்தர உறுப்பினர்கள் தொடர்புடைய பிரச்சனைகளில் .நா
சபை மௌனமான பார்வையாளராகவே இருந்தது. ‘

.
I,II

.
II,III

.
I, III

.
மேற்கூறப்பட்ட அனைத்தும்

விடை: . மேற்கூறப்பட்ட அனைத்தும

 

16.சூயஸ் கால்வாய் செங்கடலை இணைக்கிறது.

.
ஏடன் வளைகுடாவுடன்

.
காம்பே வளைகுடாவுடன்

.
மத்தியதரைக் கடலுடன்

.
அரபிக் கடலுடன்

விடை: . மத்தியதரைக் கடலுடன்

 

17..நா சபையின் முதல் பொதுச் செயலாளர் டிரிக்வே ………….. வை சேர்ந்தவராவார்.

.
பர்மா

.
ஜப்பான்

.
சிங்கப்பூர்

.
நார்வே

விடை: . நார்வே

 

18.கூற்று: 2017இல் பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியே செல்வதாக (Exit) அறிவித்தது.

காரணம்:
பிரிட்டனின் வெளியேற்றம் பிரெக்ஸிட்’ (Brexit) என அழைக்கப்படுகிறது.

.
கூற்று, காரணம் இரண்டும்
சரி. காரணம் கூற்றை
விளக்குகிறது.

.
கூற்று காரணம் இரண்டும்
சரி. ஆனால் காரணம்
கூற்றை விளக்கவில்லை .

.
கூற்று சரி. காரணம்
தவறு.

.
கூற்று தவறு. காரணம்
சரி.

விடை: . கூற்று,
காரணம் இரண்டும் சரி.
காரணம் கூற்றை விளக்குகிறது.

 

19.கிளாஸ்நாஸ்ட் குறிப்பது …………………..

.
ஒளிவுமறைவற்ற வெளிப்படைத் தன்மையை

.
சோவியத் கம்யூனிச கட்சியை
ஜனநாயகப் படுத்தப்படுவதை

.
சோவியத் ஐக்கிய பாராளுமன்றம் மறுகட்டமைப்புச் செய்யப்படுவதை

.
பொதுவுடைமைத் தத்துவத்திற்குப் புத்துயிர் அளிப்பதை

விடை: . சோவியத்
கம்யூனிச கட்சியை ஜனநாயகப்
படுத்தப்படுவதை

 

20.சோவியத் யூனியன் …………………. இல் சிதறுண்ட து.

.
நவம்பர் 17, 1991

.
டிசம்பர் 8, 1991

.
மே 1. 1991

.
அக்டோபர் 17, 1991

விடை: . டிசம்பர்
8, 1991

 

II. குறுகிய விடையளிக்கவும்

1.அமெரிக்கா, சோவியத் யூனியன் ஆகியவற்றின் உளவு நிறுவங்களைக் குறிப்பிடவும்.

விடை:

 • அமெரிக்கா உளவு
  நிறுவனம் CIA – மத்திய புலனாய்வு
  முகமை) – 1247இல் நிறுவப்பட்டது.
 • சோவியத் யூனியன்
  உளவு நிறுவனம் KB – சோவியத்
  யூனியன் உளவு நிறுவனம்
  1954
  ல் நிறுவப்பட்டது.

 

2.கம்யூனிசத்தைக் கட்டுக்குள் வைத்தல் எனும் கோட்பாட்டை விளக்குக

விடை:

 • அமெரிக்க குடியரசுத் தலைவர் ஹாரி. எஸ்.
  டரூமன்எந்த நாட்டை
  கொள்கையினால் மேலாதிக்கம் செலுத்தப்படுகிறதோ அந்நாடுகளுக்குப் பொருளாதாரம் ராணுவ
  உதவிகளை வழங்கப் போவதாக
  அறிவித்தார்.
 • இது அமெரிக்காவின்கம்யூனிசத்தைக் கட்டுக்குள் வைத்தல்எனரும் கோட்பாட்டை வரையறை செய்தது.

 

3..நா சபையில் நிறைவேற்றப்பட்டஅமைதிக்காக இணைகிறோம்எனும் தீர்மானத்தின் சிறப்பினைக் குறிப்பிடவும்.

விடை:

 • அமெரிக்காவின் முயற்சியால் ஐக்கிய நாட்டு பொது
  அவைஅமைதிக்காக இணைகிறோம்
  எனும் தீர்மானத்தை நிறைவேற்றியது.
 • பாதுகாப்பு அவையானது
  நெருக்கடிகளில் உடன்பாடு
  எட்டப்படாமல் போனால்
  பொது அவை ராணுவத்தைப் பயன்படுத்தும் என
  பரிந்துரை செய்தது.
 • சோவியத் யூனியன்
  இது சட்டத்திற்கு புறம்பானது என எண்ணியது.

 

4.‘கோமிங்பார்ம்குறித்து நீங்கள் அறிவதென்ன?

விடை:

 • சோவியத் யூனியனில்
  கோமிங்பார்ம் எனும்
  அமைப்பு
 • ஐரோப்பிய நாடுகளின்
  அனைத்து கம்யூனிஸ்ட் கட்சியின்
  பிரதிநிதிகள் இதில்
  அங்கம் வகித்தனர்.
 • இந்த அமைப்பு
  கம்யூனிஸ்ட் அல்லாத நாடுகளுடனான வணிக உறவுகளை தடுக்க
  முயன்றது.

 

5.பனிப்போர் காலகட்டத்தைச் சேர்ந்த மறைமுகபோர்களுக்கு எடுத்துக்காட்டுகள்
தருக.

விடை:

 • பனிப்போர் காலகட்டத்தில் நடைபெற்ற மறைமுக போர்களுக்கு சிறந்த எடுத்துக்காட்டுகொரியப்
  போர், வியட்நாம் போர்
  ஆகும்.
 • வட கொரியா
  மற்றும் வட வியட்நாம்
  கம்யூனிச அரசுகளுக்கு சோவியத்
  யூனியன் ஆதரவளித்தது.
 • தென் கொரியாவுக்கும், தென் வியட்நாமுக்கும் அமெரிக்கா
  ஆதரவு அளித்தது.
 • இந்நிகழ்வு இருபெரும்
  வல்லரசுகளுக்கிடையே இருந்த
  பனிப்போரை எடுத்துக்காட்டுகிறது.

 

6.ஹங்கேரியச் சிக்கலின் பின்னணி யாது?

விடை:

 • ஸ்டாலின் ஆட்சியின்
  போது ஹங்கேரி பிரதமராக
  நியமிக்கப்பட்ட ரகோசி
  1953
  ல் பதவி நீக்கம்
  செய்யப்பட்டார்.
 • இம்ரே நெகி
  என்பவர் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால் அவருக்கு
  அரசாங்க ஆதரவு இல்லை.
 • அறிவார்ந்த மக்களால்
  ரகோசிக்கு நடத்தப்பட்ட கிளர்ச்சி
  1956
  ல் அவர் பதவி
  விலகிய பின்னும் நீடித்து
  தேசிய எழுச்சியானது.
 • இம்ரே நெகி
  ஒரு கூட்டணி ஆட்சியை
  நிறுவினார். கிளர்ச்சி தொடரவே
  ரஷ்யா ஹங்கேரிக்கு படைகளை
  அனுப்பி கிளர்ச்சியை ஒடுக்கியது.

 

7.ஷூமன் திட்டம் என்றால் என்ன?

விடை:

 • பிரான்சுக்கும் ஜெர்மனிக்கும் சமரசம் ஏற்பட்டால் அது
  இரு நாடுகளுக்கு நன்மை
  என்றார் ஷீமன்.
 • இரு நாடுகளின்
  நிலக்கரி எக்கு கூட்டு
  உற்பத்தியை உயர்மட்ட ஆணையம்
  மூலம் நிர்வகிக்கப்பட வேண்டும்
  என முன்மொழிந்தார்.
 • பொருளாதார ஒருங்கிணைப்புக்கான திட்டம் பரஸ்பர
  ஆர்வத்தை உருவாக்கி இரு
  நாடுகளையும் இணைத்தது.
 • இதுவே ஷீமன்
  திட்டம் ஆகும்.

 

8.பிரெஸ்த்ட்ரோகியா கோட்பாட்டின் பொருட்சுருக்கதைக் கூறுக.

விடை:

 • சோவியத் அதிபர்
  கோர்பசேவ் பிரெஸ்தட்ரோகியா பற்றி
  அறிவித்தார்.
 • இதில் அரசியல்
  பொருளாதார மறு கட்டமைப்பின் அவசியத்தை விளக்கினார்.
 • இதன் மூலம்
  கோர்பசேவ் சோவியத் யூனியனிலுள்ள பல நிறுவனங்களின் மீதிருந்த
  கட்டுப்பாடுகளை தளர்த்தினார்.

 

III. சுருக்கமான விடையளிக்கவும்

1.அமெரிக்காவால் கட்டுப்படுத்தப்பட்ட
நேட்டோவுக்கான பதில் நடவடிக்கையே சோவியத் ரஷ்யாவின் வார்சா உடன்படிக்கை விளக்குக.

விடை:

 • மேற்கு ஜெர்மனி
  நேட்டோ அமைப்பில் உறுப்பினரானதால் சோவியத் ரஷ்யா எதிர்வினை
  ஆற்றியது. – சோவியத் யூனியனும்
  அதன் நட்பு நாடுகளும்
  பரஸ்பர நட்பு பரஸ்பர
  உதவி எனும் உடன்படிக்கையில் கையெழுத்திட்டன.
 • போலந்து தலைநகர்
  வார்சாவில் கையெழுத்தானதால் இது
  வார்சா உடன்படிக்கை எனப்பட்டது.

 

2..நா சபையின் சாசனம் முடிவாக ஏற்றுக்கொள்ளப்பட்டதன்
பல்வேறு கட்டங்கள் குறித்து எழுதுக.

விடை:

 • டம்பர்கள் ஒக்ஸ்
  மாளிகையில் அமெரிக்கா, சோவியத்,
  சீனா, இங்கிலாந்து நாடுகள்
  ஒன்றுக்கூடி உலக அமைப்புக்கான ஒரு செயல்திட்டத்தை உருவாக்கினர்.
 • மாஸ்கோ பிரகடனம்
  பன்னாட்டு சங்கத்துக்கு பதில்
  வேறு உலக அமைப்பு
  உருவாக்கப்பட அங்கீகாரம் அளித்தது.
 • சான் பிரான்சிஸ்கோ மாநாட்டில் இது தொடர்பான
  விவாதங்கள் நிறைவுற்று .நா.
  சாசனம் இறுதி செய்யப்பட்டது.

 

3.நேட்டோ உருவாக்கப்பட்டதின்
பின்னணியைக் கண்டறியவும்.

விடை:

 • அமெரிக்காவுடன் நட்புறவு
  கொண்டிருந்தாலும் மேற்கு
  ஐரோப்பிய நாடுகள் பாதுகாப்பின்மையை உணர்ந்தன.
 • செக்கோஸ்லோவாக்கியாவில் கம்யூனிஸ்டுகள் வெற்றி அவர்கள் அச்சத்தை
  அதிகமாக்கியது.
 • இதனால் மேற்கு
  ஐரோப்பிய நாடுகள் ஒரு
  கூட்டுப்பாதுகாப்புத் தீர்வு
  காண விருப்பம் கொண்டன.
 • இப்பின்னணியில்தான் நேட்டோ
  அமைப்பு உருவாக்கப்பட்டது.

 

4.சூயஸ் கால்வாய் சிக்கல் குறித்து சுருக்கமாக வரைக

விடை:

 • 1956ல் எகிப்து
  அதிபர் நாசர் சூயஸ்
  கால்வாயை தேசியமயமாக்கினார்.
 • இக்கால்வாய் முன்னர்
  ஆங்கிலோ பிரெஞ்சு கால்வாய்
  கழகம் என்னும் நிறுவனத்துக்கு சொந்தமானதாகும்.
 • இதனால் இஸ்ரேல்,
  பிரிட்டன், பிரான்ஸ் படைகள்
  எகிப்து மீது படையெடுத்து சீனாய் தீபகற்பம் மற்றும்
  செய்த் மீது தாக்கின.
 • .நா.
  கண்டனத்தையடுத்து இந்நாடுகள் போரை நிறுத்தி படைகளை
  விலக்கிக் கொள்ள முடிவு
  செய்தன. நாசர் வெற்றியாளரானார்.

 

5.நேட்டோவைப் போல ஏன் சீட்டோ (SEATO) பிரபலமடையவில்லை ?

விடை:

 • சீட்டோ ஆசிய
  பசிபிக் பகுதியில் நோட்டோவின் பிரதிநிதியாக அமைந்தது.
 • பிலிப்பைன்ஸ் தாய்லாந்து மட்டும் இதில் சேர
  மற்ற நாடுகள் பங்கேற்க
  மறுத்தன.
 • சீட்டோ ஒரு
  ஆலோசனை மன்றமாக மட்டுமே
  செயல்பட்டது.
 • இதனால் சீட்டோ
  புகழ்பெறவில்லை .

 

IV. விரிவான விடையளிக்கவும்

1.அணிசேரா இயக்கத்தின் இலக்குகளையும் நோக்கங்களையும் கோடிட்டுக் காட்டவும்.

விடை:

 • அணிசேரா இயக்கத்தை
  முன்னெடுத்தவர்கள், 1955ஆம்
  ஆண்டு பாண்டுங் மாநாட்டில் கீழே குறிப்பிடப்பட்டவற்றை இயக்கத்தின் இலக்குகளாகவும், நோக்கங்களாகவும் நிர்ணயம் செய்தனர்.
 • அடிப்படை மனித
  உரிமைகளை மதித்தல். ஐக்கிய
  நாடுகள் சபையின் சாசனத்தின் கொள்கைகளையும் நோக்கங்களையும் மதித்தல்.
 • அனைத்து நாடுகளின்
  இறையாண்மையையும் அவற்றின்
  எல்லைப்பரப்பு ஒருமைப்பாட்டையும் மதித்தல்.
 • சிறியவை, பெரியவை
  என்றில்லாமல் அனைத்து
  இனங்களும், அனைத்து நாடுகளும்
  சமம் என அங்கீகரித்தல்.
 • அடுத்த நாட்டின்
  உள்விவகாரங்களில் தலையிடாமலும் குறுக்கீடு செய்யாமலும் இருத்தல்.
 • .நா
  சபையின் சாசனத்திற்கு இணங்க
  ஒவ்வொரு நாடும் தனியாகவோ
  அல்லது கூட்டாகவோ தன்னைப்
  பாதுகாத்துக் கொள்ளும்
  உரிமையைப் பெற்றுள்ளதை மதித்தல்.
 • வல்லரசு நாடுகளில்
  ஏதாவது ஒன்றின் குறிப்பிட்ட நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்வதற்காக கூட்டுப்பாதுகாப்பு உடன்படிக்கைகளைப் பயன்படுத்தாதிருத்தல்.
 • எந்த நாடாக
  இருந்தாலும் அதன் அரசியல்
  சுதந்திரம், எல்லைப்பரப்பு ஒருமைப்பாடு ஆகியவற்றிற்கு அச்சத்தை
  ஏற்படுத்தும், இராணுவ
  நடவடிக்கைகள், வலியச்
  சென்று தாக்குதல் போன்ற
  நடவடிக்கைகளைத் தவிர்த்தல்.
 • அனைத்துப் பன்னாட்டுப் பிரச்சனைகளுக்கும் அமைதியான
  வழியில் தீர்வு காணப்படவேண்டும்.
 • பரஸ்பர அக்கறை,
  ஒத்துழைப்பு ஆகியவற்றை மேம்படுத்துதல்.
 • நீதி மற்றும்
  பன்னாட்டு கட்டுப்பாடுகளுக்கு மதிப்பளித்தல்.

 

2.அரபுஇஸ்ரேலிய முரண்பாட்டின் தோற்றத்தை விவாதிக்கவும். தொடர்ந்து ஏற்பட்ட நிகழ்வுகள் எவ்வாறு இரு நாடுகளுக்கிடையே 1967இல் பெரும் போர் ஏற்படக் காரணமாயிற்று என்பதை விளக்கவும்.

விடை:

 • 1947 நவம்பரில் பாலஸ்தீனத்தை அராபியர் நாடு, யூதர்கள்
  நாடு என இரண்டாகப்
  பிரிப்பதற்கு .நா.
  சபை வாக்களித்து முடிவு
  செய்த உடனேயே பாலஸ்தீனத்தில் அராபியர்களுக்கும் பார்களுக்கும் இடையே போர் மூண்டது.
 • பாலஸ்தீனத்திலிருந்து ஆங்கிலப்படைகள் வெளியேறிய பின்னா இஸ்ரேல்
  தன்னை சுதந்திர நாடாக
  அறிவித்தது.
 • இஸ்ரேல் .நா..
  சபை அரசியல் முடிவுகள்
  எடுப்பதில் ஓரளவே ஈடுபாடு
  கொண்டது.
 • .நா.
  சபையின் அமைதிகாக்கும் படை
  எகிப்துஇஸ்ரேல் எல்லையில்
  முகாமிட்டிருந்தது.
 • 1966 வாககில அமெரிக்கா
  இஸ்ரேலுக்கு புதிய ரக
  போர் விமானங்களையும் ஏவுகலைகளையும் வழங்கத் தொடங்கியது.
 • அடுத்து வந்த
  சில மாதங்களில் இஸ்ரேலுக்கும் அதைச் சுற்றியுள்ள அரபு
  நாடுகளுக்குமிடையே பதட்டம்
  அதிகரித்தது.
 • .நா.
  வின் படைகள் ஒட்டுமொத்தமாக எகிப்திலிருந்து விலக்கிக்
  கொள்ளப்பட வேண்டும் எனக்
  கேட்டுக் கொண்டது.
 • இதனைத் தொடர்ந்து
  1967
  மே 23இல் எகிப்து
  டைரன் கடலிடுக்கு வழியாக
  இஸ்ரேலின் கப்பல்கள் பயணப்படுவதற்குத் தடைவிதித்தது.
 •  ஜூன் மாதத்
  தொடக்கத்தில் இஸ்ரேல்
  எகிப்தைத் தாக்கியது. கெய்ரோ
  நகரின் விமானத் தளங்களிலிருந்த விமானப்படை விமானங்கள் முற்றிலுமாக அழிக்கப்பட்டன.
 • 6ம் நாள்
  போரின் முடிவில் பாலஸ்தீனியர்கள் மீதமிருந்த பகுதிகளான மேற்குக்கரை, காஜா முனை மற்றும்
  கிழக்கு ஜெருசலேம் ஆகியவற்றைக் கைப்பற்றியதோடு, சிரியாவின் கோலன் குன்றுப் பகுதிகளையும் எகிப்தின் சினாய் பகுதிகளையும் இஸ்ரேல் கைப்பற்றிக் கொண்டது.
 • பாலஸ்தீனியர்கள் வெளியேறக்
  கட்டாயப்படுத்தப்பட்டனர். ஒரு
  மில்லியனுக்கும் அதிகமானமோர் இன்றும் இஸ்ரேலின் இராணுவக்
  கட்டுப்பாட்டின் கீழ்
  இருக்கின்றனர்.

 

3.“பாதுகாப்புக் கவுன்சிலின் நிரந்தர உறுப்பினர்கள் தொடர்பு கொண்டுள்ள பிரச்சனைகளில் .நா சபை மௌனமான பார்வையாளராகவே இருந்ததுபனிப்போர் காலத்து அனுபவங்களின் வாயிலாக இக்கூற்றை விளக்கமாக எடுத்துரைக்கவும்.

விடை:

 • 1945 முதல் 1991 வரையிலான
  காலப்பகுதியில் வல்லரசுகளின் வெளியுறவுக் கொள்கையை பனிப்போரே
  வரையறை செய்தது.
 • அமெரிக்கா தனது
  பொருட்களுக்கான திறந்தவெளி சந்தையை மேம்படுத்தவும் கம்யூனிசத்தை கட்டுப்படுத்தவும் விரும்பியது.
 • மற்றொரு புறத்தில்
  சோவியத் யூனியன் கம்யூனிசத்தைப் பரப்பவும். நட்பு நாடுகளுடன் நட்புணர்வைப் மேம்படுத்தவும் விரும்பியது.
 • இவ்விரு சக்திகளும் ஆறு முக்கிய உத்திகளைக் கையாண்டன. அவை பொருளாதார
  உதவி. இராணுவ ஒப்பந்தம்,
  உளவறிதல், பரப்புரை செய்தல்,
  நேரடியாக மோதாமை, போரின்
  விளிம்புவரை செல்லுதல் ஆகியன.
 • மேற்காணும் அனைத்தும்
  உலகின் இருபெரும் வல்லரசுகள் நிகழ்த்திய போதும் .நா.
  பாதுகாப்பு சபை கண்டிக்க
  இயலாமல் மௌன பார்வையாளராகவே இருந்ததை உலகம் கண்டது.

 

4.போரிஸ் யெல்ட்சினின் அரசியல் வளர்ச்சியைக் குறிப்பாக சோவியத் யூனியனின் வீழ்ச்சியில் அவர் வகித்த பங்கின் மீது கவனம் குறித்து விவரிக்கவும்.

விடை:

 • போரிஸ் யெல்ட்சின் (1931 – 2007) 1961இல் பொதுவுடைமைக் கட்சியின் முழுநேர ஊழியரானார்.
 • எழுபதுகளில் பரவலாக
  அறியப்பட்டவரான இவர்
  கட்சியில் முக்கியப் பதவிகளை
  வகிக்கத் தொடங்கினார்.
 • கோர்பசேவ் பதவிக்கு
  வந்த பின்னர் அவர்
  மாஸ்கோ கட்சி அமைப்பிலுள்ள ஊழல்களைக் களைவதற்காக போரிஸ்
  யெல்ட்சினை தேர்ந்தெடுத்தார்.
 • 1986இல் யெல்ட்சின் பொலிட்பீரோவின் உறுப்பினராக உயர்த்தப்பட்டார்.
 • விரைவில் அவர்
  மாஸ்கோவின் மேயராக நியமிக்கப்பட்டார்.
 • கட்சி கூட்டங்கள் சீர்திருத்தப் பணிகள்
  மிக மெதுவாக நடைபெறுவதாக இவர் விமர்சனம் செய்ததால்
  கோர்பச்சேவின் எதிர்ப்பைச் சம்பாதித்தார்.
 • நிர்வாகம் ஜனநாயகப்
  படுத்தப்பட வேண்டும், பொருளாதாரம் சீர்திருத்தப்பட வேண்டும்
  எனும் கருத்துக்களை அவர்
  முன்வைத்ததால் சோவியத்
  வாக்காளர்களிடையே பிரபலமானார்.
 • 1989 மார்ச்சில் சோவியத்
  யூனியனின் புதிய பாராளுமன்றமான மக்கள் பிரதிநிதிகள் சபையில்
  ஒரு இடத்தைப் பெறுவதில்
  வெற்றி பெற்றார்.
 • ஓராண்டுக்குப் பின்னர்,
  1990
  மே 29இல் கோர்பச்சேவின் விருப்பத்திற்கு எதிராக
  சோவியத் பாராளுமன்றம் யெல்ட்சினை ரஷ்ய குடியரசின் தலைவராகத்
  தேர்ந்தெடுத்தது.
 • இவரே சோவியத்
  யூனியனின் வீழ்ச்சிக்குப் பின்னர்
  1991
  இல் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் தலைவரானார்.

 

V. செயல்பாடுகள் (மாணவர்களுக்கானது)

1. ஐக்கிய நாடுகள்
சபை தினத்தன்று (அக்டோபர்
24)
மாணவர்களை ஒரு மாதிரி
பொது சபை அமர்வை
நடத்தச் செய்து இப்பாடத்தில் விவரிக்கப்பட்டுள்ள ஏதேனும்
ஒரு பிரச்சனை குறித்து
விவாதம் நடத்தச் செய்யலாம்.

2. மாணவர்களை இரு
அணிகளாகப் பிரித்து முதலாளித்துவத்தை ஆதரித்தும் எதிர்த்தும் பட்டிமன்ற நிகழ்ச்சி நடத்தலாம்.

3. ஐக்கிய நாடுகள்
சபை 1948 டிசம்பர் 10இல்
வெளியிட்ட மனித உரிமைப்
பிரகடன சாசனத்தை ஆசிரியர்களும் மாணவர்களும் ஆய்வு செய்யலாம்.

Related Post

Leave a Comment

× Xerox [50p Only]