சொந்த யூடியூப் சேனலை உருவாக்குதல், சந்தைப்படுத்தல் குறித்த பயிற்சி வகுப்பு
தமிழக அரசின் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் சார்பில், சொந்த யூ டியூப் சேனல் உருவாக்குதல், இணையதளத்தில் யூடியூப் சேனலை பயன்படுத்தி உங்கள் தயாரிப்புகளை சந்தைப்படுத்துதல் குறித்த பயிற்சி வகுப்பு மார்ச் 21 முதல் 23 வரை 3 நாட்கள் காலை 9:30 முதல் மாலை 5:00 மணி வரை நடக்க உள்ளது.
மதுரை ரிசர்வ்லைன் பஸ்ஸ்டாப் அருகே மாநில ஊரக வாழ்வாதார இயக்க, மேலாண்மை அலகு பகுதியில் நடக்க உள்ளது. இதில் தொழில் முனைவோர் யூ டியூப் சேனலை உருவாக்குவது எப்படி, வீடியோ மற்றும் ஸ்லைடு ேஷா உருவாக்கம், சமூக ஊடக சந்தைப்படுத்துதல், சமூக ஊடகங்களை இணைத்து வாடிக்கையாளர் நெட் ஒர்க்கை எவ்வாறு அதிகரிப்பது, பயனுள்ள சந்தைப்படுத்துதல், ஊக்குவிப்பு, ஆன்லைன் மார்க்கெட்டிங், விதிகள் ஆகியவற்றை விரிவாக விளக்கும் வகையில் பயிற்சி வடிவமைக்கப்பட்டுள்ளது.18 வயதுக்கு மேற்பட்ட ஆர்வமுள்ள, குறைந்தபட்சம் பத்தாம் வகுப்பு தகுதியுடன் உள்ளோர் விண்ணப்பிக்கலாம். கட்டணம் ரூ.5 ஆயிரம். விரும்புவோர் பயிற்சி கட்டணத்தை செலுத்தி, தமிழ்நாடு தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனத்தில் பதிவு செய்யலாம்.
முன்பதிவு அவசியம். கூடுதல் விவரம் பெற, ‘www.editn.in‘ என்ற வலைத்தளத்தில் அறியலாம். முகவரி: தமிழ்நாடு தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம், சிட்கோ தொழிற்பேட்டை, இ.டி.ஐ.ஐ., அலுவலக சாலை, ஈக்காட்டு தாங்கல், சென்னை-32. தொடர்புக்கு: 70101 43022 என கலெக்டர் சங்கீதா தெரிவித்துள்ளார்.
உங்களிடம் உள்ள PDF Files XEROX வேண்டுமென்றாலும் தொடர்பு கொள்ளவும் (Whatsapp): +91 80720 26676 – 1 Page (50 Paise Only)
Follow @ Google: புதிய வேலைவாய்ப்பு செய்திகள் மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள் – Click Here to Follow