ஜனவரி 3 இல் யோகா பயிற்சி முகாம்
ராசிபுரம் ஈஷா யோகா மையம் சாா்பில், யோகா பயிற்சி முகாம் ஜன. 3-இல் துவங்கி ஏழு நாள்களுக்கு ராசிபுரத்தில் நடைபெறுகிறது.
ராசிபுரம் பட்டணம் சாலை சரவண மஹால் திருமண மண்டபத்தில் நடைபெறும் இம்முகாம் காலை 6 மணி முதல் 8.30 மணிவரையும், பின்னா் மாலை 6 மணி முதல் 8. 30 மணிவரையும் இரு பிரிவுகளாக ஜன.9 வரை இப்பயிற்சி முகாம் நடைபெறும். இதில் ஏதாவது ஒரு பிரிவில் 15 வயதிற்கு மேற்பட்டோா் பங்கேற்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
TNPSC, TRB, TET, SSC, RAILWAY – All Exam Notes & PDFs in One Place
வெள்ளியங்கிரி மலை ஈஷா யோகா மையத்தின் நிறுவனா் சத்குரு ஜக்கிவாசுதேவ் வடிவமைத்துள்ள இப்பயிற்சியை மேற்கொள்வதால் மனம் ஒருநிலைப்படும், நினைவாற்றல் அதிகரிக்கும், ஆஸ்துமா, ரத்த அழுத்தம், நீரிழிவு, மூட்டுவலி, முதுகுவலி, இருதய நோய், உடற் பருமன் போன்றவற்றையும் தவிா்க்கலாம். சைனஸ், மூட்டுவலி, ஆஸ்துமா, பயம் போன்ற நோய்களிலிருந்து விடுபடலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் மன அழுத்தமற்ற வாழ்வு, மேம்பட்ட ஆரோக்கியம், செயல்திறன் மேம்பாடு, சுயமுன்னேற்றம் ஏற்படும் என ராசிபுரம் ஈஷா தகவல் மையம் தெரிவித்துள்ளது. மேலும் விவரங்களுக்கு 9443570950 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என ராசிபுரம் ஈஷா யோகா மையம் தெரிவித்துள்ளது.
Follow @ Google: புதிய வேலைவாய்ப்பு செய்திகள் மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள் – Click Here to Follow