கல்வெட்டுகளில் பெண்கள்
மற்றும் கல்வெட்டு வாசிப்புப் பயிற்சி
நம்
கல்வெட்டுகளை ஆய்வு
செய்தால் தமிழர் வரலாற்றில் பெண்கள் பெற்றிருந்த நிலையினை
முழுமையாக அறிந்துகொள்ள முடியும்.
பெண்களுக்குச் சொத்துரிமை இருந்தது. அதை
அவர்கள் பலவற்றுக்கும் கொடையளித்தார்கள். ஏதோ அரசியர்
வசம் மட்டும் இந்தச்
சொத்துரிமை இருந்தது என்று
நினைக்க வேண்டாம். ஆடல்
மகளிர், இசைக்கலைஞர்கள், இல்லத்தரசிகள், பணிப்பெண்கள், ஏன்
போரின்பொழுது கைப்பற்றப்பட்டு வேளம் ஏற்றப்பட்ட பெண்களுக்குக் கூட தம் வசமிருந்த
சொத்துகளை ஆலயங்களுக்கு நிவந்தங்கள் அளிக்கும் உரிமை இருந்தது.
அவற்றைக் கல்வெட்டுகளில் பதிவும்
செய்துவைத்திருக்கிறார்கள்.
காலத்தின்
கண்ணாடியான கல்வெட்டுகள் வரலாற்றில் மனிதர்களின் வாழ்வியல் மற்றும்
உரிமைகள் எப்படி இருந்தன
என்பதனை அறியக் கிடைக்கும் ஆவணம். அவற்றில் ஆண்களின்
சாதனைகள் மட்டும் பதிவாகவில்லை பெண்களின் பங்களிப்பும் பெருமளவில் பதிவாகியிருக்கின்றன. குறிப்பாக
தமிழ்ச் சமூகத்தில் பெண்கள்,
நீதிபதி போன்ற பதவிகளிலும், கல்விப்புலத்திலும் சிறந்துவிளங்கியமைக்கான சான்றுகளைத் தருகின்றன
கல்வெட்டுகள்.
இன்று
பெண்களை இரவு நேரத்தில்
விசாரணைக்காகக் காவல்
நிலையத்துக்கு அழைத்துச்
செல்ல இயலாது. இது
சட்டம் தரும் பாதுகாப்பு. ஆனால் இந்த அடிப்படை
உரிமையை மன்னர்கள் காலத்திலேயே வழங்கி பெண்ணைக் கைது
மற்றும் விசாரணைக்கு அழைத்துச்
செல்வதற்கான நடைமுறை விதிகளை
வகுத்திருப்பதை ஒரு
கல்வெட்டு தெரிவிக்கிறது.
இப்படிக்
கல்வெட்டுகளில் காணப்படும் சரித்திரப் பெண்கள் பற்றிய
தகவல்களை நமக்காகத் தொகுத்துத் தருகிறார் திருமதி. பத்மபிரியா பாஸ்கரன், குடும்பத் தலைவி.
காஸ்ட் மேனேஜ்மென்ட் (Cost Management) பயின்றவர்.
பழந்தமிழர் நாகரிகம், ஆன்மிகம்,
கட்டடக்கலை, ஆலயங்கள், கல்வெட்டுகள் ஆகியவற்றின் மீது தீராத
காதல் கொண்டு தன்னார்வலராக ஆய்வு மேற்கொண்டு வருபவர்.
ஆலயம் கண்டேன் என்னும்
அமைப்பின் மூலம் சிதைவுற்றுக் கொண்டிருக்கும் பழைமை
வாய்ந்த கோயில்களை அடையாளப்படுத்தி வழிபாட்டுக்கொண்டுவர முயல்பவர்.
இவரது கூவம் நதிக்கரைக் கோயில்கள் பற்றிய ஆய்வு
மிகவும் குறிப்பிடத்தக்கது. சோழ
மன்னர்கள் கூவம் நதிக்கரையில் எழுப்பிய ஆயிரம் ஆண்டுப்
பழைமை வாய்ந்த கோயில்களைக் கண்டறிந்து அதைப் பல
ஆர்வலர்களின் துணையோடு
வழிபாட்டுக்குக் கொண்டுவரும் முயற்சியில் ஈடுபட்டிருப்பவர். சென்னை
வரலாறு குறித்த இவரின்
ஆய்வுகள் சுவாரஸ்யமானவை. இவர்,
அவள் விகடன் மற்றும்
சக்தி விகடனோடு இணைந்து
கல்வெட்டுகளில் சரித்திரப் பெண்கள் என்னும் உரையினை
நம் வாசகர்களுக்காக வழங்க
இருக்கிறார்.
கல்வெட்டுகளை வாசிப்பது என்பது மிகவும்
சிரமமான காரியம் என்று
நம்மில் பலரும் நினைத்துக்கொண்டிருக்கிறோம். ஆனால். அதை
எளிமையாக்கிக் கல்வெட்டு
எழுத்துகளை வாசிக்கும் பயிற்சியை
நமக்கு இணையம் மூலம்
வழங்க இருக்கிறார் உலக
சித்தக் கலை ஆய்வு
மையத் தலைவர் மு.
அரி. கல்வெட்டுகளை வாசிப்பது
பெரும் பயிற்சி தேவைப்படும் விஷயம் என்றாலும் அதற்கான
முதல் படியாக எளிய
அடிப்படையான பயிற்சியை நமக்கு
வழங்க இருக்கிறார் இவர்.
இந்த
இரண்டு நிகழ்வுகளும் இணையம்
மூலம் வரும் சனிக்கிழமை (20-03-2021) அன்று நடைபெற
உள்ளது. இந்தக் கட்டணமில்லா வெபினாரில் நீங்களும் கலந்துகொள்ள முன்பதிவு அவசியம்.
நாள்: 20.03.2021
நேரம்: மாலை
4.30 முதல் 5.30 வரை
தலைப்பு: கல்வெட்டுகளில் சரித்திரப் பெண்கள் மற்றும்
கல்வெட்டு எழுத்துகளை வாசிப்பது
எப்படி?
நீங்களும் இந்த வெபினாரில் கலந்துகொள்ள: Click
Here