HomeBlogபெண்கள் ஏன் அரசியலுக்கு வர வேண்டும்? ஆன்லைன் நிகழ்ச்சி

பெண்கள் ஏன் அரசியலுக்கு வர வேண்டும்? ஆன்லைன் நிகழ்ச்சி

 

பெண்கள் ஏன்
அரசியலுக்கு வர வேண்டும்?
ஆன்லைன்
நிகழ்ச்சி

அரசியல்
களத்துக்குள் பெண்கள்
நுழைய வேண்டியதன் அவசியம்
அந்த வட்டத்துக்குள் இருப்பவர்களால் அதிகம் பேச முடியும்.

அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பெதற்கு?’ என்று
கேட்ட சமூகம் தான்
இன்று, ‘பெண்களுக்கெல்லாம் இப்போ
அரசியல் எதுக்கு?’ என்று
மாறியிருக்கிறது. ஆண்கள்
கோலோச்சும் எந்தத் துறைக்குள் நுழைந்தாலும் பெண்களை
அங்கீகரிப்பதில் சிக்கல்
எழவே செய்கிறது. அவர்களுக்கான வாய்ப்புகளும் பல
இடங்களில் மறுக்கப்படுகின்றன.

இதைவிட
நமக்கு எதுக்கு அரசியல்
எல்லாம்?’ என்கிற மனோபாவமும் பெண்களிடம் நீடிக்கிறது. மக்கள்தொகையில் ஆண்களுக்குச் சமமாக
இருக்கும் பெண்களுக்கு அரசியல்
பிரதிநிதித்துவம் வழங்க
வேண்டியது அல்லது இருக்க
வேண்டியது மிகவும் அவசியமான
ஒன்று.

அரசியல்
களத்துக்குள் பெண்கள்
நுழைய வேண்டியதன் அவசியம்
அந்த வட்டத்துக்குள் இருப்பவர்களால் அதிகம் பேச முடியும்.
பெண்கள் தினத்தை முன்னிட்டு அவள் விகடன் மற்றும்
ஜூனியர் விகடன் வழங்கும்
பெண்கள் ஏன் அரசியலுக்கு வர வேண்டும்?’ அரசியல்
அலசல்! என்ற ஆன்லைன்
நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

திமுக
முன்னாள் அமைச்சர் சுப்புலட்சுமி ஜெகதீசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் எம்.எல்.
பாலபாரதி, பாஜக மகளிரணி
தேசியச் செயலாளர் வானதி
சீனிவாசன், தேசிய மகளிர்
காங்கிரஸ் பொதுச்செயலாளர் விஜயதரணி,
அதிமுக முன்னாள் எம்.எல்.
மகேஸ்வரி ஆகியோர் கலந்துகொண்டு பேசவிருக்கின்றனர்.

மார்ச்
6-
ம் தேதி (சனிக்கிழமை) மாலை 4.30 முதல் 5.30 மணி
வரை நிகழ்வு நடைபெறும்.

For Registration: Click Here

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular