2021ம் ஆண்டுக்கான காவல்
துறையில்
உள்ள
காலி
பணியிட
அறிவிப்பு
எப்போது
வெளியாகும்?
காவல்துறையில் 2021ம் ஆண்டுக்கான காலி
பணியிடங்கள் குறித்து அறிக்கை
தக்கல் செய்ய தமிழக
அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
காவல்துறையில் இருக்க கூடிய காலி
பணியிடங்கள் தொடர்பாக அனைத்து
மாநில உயநீதிமன்றங்கள் தாமாக
முன்வந்து வழக்குகளை விசாரணை
செய்யவேண்டும் என
உச்சநீதிமன்றம் உத்தரவு
பிறப்பித்திருந்தது.
இந்த
உத்தரவின் பேரில் சென்னை
உயர்நீதிமன்றம் தாமாக
முன்வந்து விசாரணை எடுத்துக்கொண்ட வழக்கானது, இன்று பொறுப்பு
தலைமை நீதிபதி முனீஸ்வரநாத் பண்டாரி மற்றும் நீதிபதி
ஆதிகேசவலு அடங்கிய அமர்வில்
விசாரணைக்கு வந்தது.
அப்போது
தமிழக அரசின் சார்பில்
அறிக்கை ஒன்று தாக்கல்
செய்யப்பட்டது. அந்த
அறிக்கையில் ஏற்கனவே உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் 2019ம் ஆண்டு வரையிலான
காவல்துறை காலி பணியிடங்களை நிரப்பிவிட்டதாகவும், 2020ம்
ஆண்டை பொறுத்த வரையில்
11,181 பதவிகளுக்கு தேர்வு நடத்ப்பட்டு தற்போது காவல்துறை ஆய்வு
மற்றும் மருத்துவ பரிசோதனைக்காக காத்திருப்பதாகவும் அந்த
அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
அதுமட்டும் அல்லாமல் உச்சநீதிமன்ற உத்தரவின்
அடிப்படையில் காவல்
ஆணையம் அமைக்கப்பட்டிருப்பதாகவும், மாநில
பாதுகாப்பு கவுன்சில் அமைக்கப்பட்டிருப்பதாகவும் அரசு தரப்பில்
தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இதனை
அடுத்தது 2021-ம் ஆண்டுக்கான காலி பணியிடங்கள் குறித்த
அறிவிப்பு எப்போது வெளியிடப்படும், 2020-ம் ஆண்டுக்கான காலி பணியிடங்கள் முழுமையாக
நிரப்பும் நடவடிக்கைகள் எப்போது
முடிவடையும் என கேள்விகளை
எழுப்பி, அது சம்பந்தமாக விரிவான அறிக்கை தாக்கல்
செய்ய வேண்டும் என
அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
மேலும்
இந்த வழக்கின் விசாரணை
ஜன.19-ம் தேதிக்கு
தள்ளிவைக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே தமிழக காவல் சீர்திருத்த சட்ட பிரிவுகளை எதிர்த்து
தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளின் தீர்ப்பை நீதிபதிகள் தேதி
குறிப்பிடாமல் தள்ளிவைத்துள்ளார்.