10, 12ம் வகுப்பு
திருப்புதல்
தேர்வு
திட்டமிட்டபடி நடைபெறும்
தமிழகத்தில் பிளஸ் 2, பத்தாம் வகுப்பு
மாணவா்களுக்கு திட்டமிட்டபடி ஜன. 19ம் தேதி
திருப்புதல் தேர்வு நடைபெறும்
என பள்ளிக் கல்வித்
துறை தெரிவித்தது.
தமிழகத்தில் பிளஸ் 2 வகுப்பு மாணவா்களுக்கான திருப்புதல் தேர்வுகள் வருகிற
20ம் தேதி முதல்
28ம் தேதி வரையும்,
பத்தாம் வகுப்பு மாணவா்களுக்கான தேர்வுகள் வரும் 19ம்
தேதி முதல் 27ம்
தேதி வரையும் நடைபெறும்
என கடந்த டிசம்பா்
மாதம் தேர்வுத் துறை
அறிவித்தது.
தற்போது
தமிழகத்தில் கரோனா பரவல்
அதிகரிப்பைத் தொடா்ந்து
பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில், பள்ளிகளில் 1 முதல் 9-ஆம் வகுப்பு
மாணவா்களுக்கு மறு
அறிவிப்பு வரும் வரை
விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனால்
திருப்புதல் தேர்வுகள் ரத்து
செய்யப்படலாம் என
எதிர்பார்க்கப்பட்ட நிலையில்,
திட்டமிட்டபடி 10 மற்றும்
12ம் வகுப்பு திருப்புதல் தேர்வுகள் நடைபெறும் என
பள்ளிக் கல்வித் துறை
அதிகாரிகள் தெரிவித்தனா்.
முதல்முறையாக திருப்புதல் தேர்வு கேள்வித்
தாள்களை தேர்வுத் துறை
அச்சிட்டு, மாநில அளவிலான
தேர்வாக நடைபெற உள்ளது.
அதே வேளையில், மே
மாதத்தில் தொற்று எண்ணிக்கை
அதிகரித்து பொதுத் தேர்வு
நடத்த முடியாத சூழல்
ஏற்பட்டால், திருப்புதல் தேர்வு
மதிப்பீடாக எடுக்க வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக கூறப்படுகிறது.