TNPSC Group 4 தேர்வு
அட்டவணை எப்போது..?
தமிழ்நாடு
அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தலைவர் பாலச்சந்திரன் நெல்லையில் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தலைவர்:
TNPSC Group 2 தேர்வுக்கான பாடத்திட்டம் தயாரிப்பு
பணி இன்னும் ஓரிரு
நாட்களில் முடிவுபெறும்.
மேலும்,
மார்ச் மாதத்தின் மத்தியில்
குரூப் 4 தேர்வுக்கான அட்டவணையை
வெளியிடுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.
TNPSC Group 4 காலிப்பணியிடம் 5000 இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. கலந்தாய்வு முடிவு
பெறும் வரை காலிப்
பணியிடங்களை அதிகரிக்க வாய்ப்புள்ளது.
TNPSC மீது
தேர்வர்களுக்கு நம்பகத்
தன்மை அதிகரித்துள்ளது. TNPSC தேர்வுகளுக்கு வினா மற்றும் விடைத்தாள்கள் கொண்டு செல்லும் வாகனங்களில் கேமராக்கள் பொருத்துவதற்கு நடவடிக்கை
எடுக்கப்பட்டுள்ளது.
எனவே,
முன்கூட்டியே வினாத்தாள் வெளியாக வாய்ப்பில்லை என்று
தெரிவித்தார்.