Sunday, August 10, 2025
HomeBlogWhatsApp – புதிய அப்டேட்

WhatsApp – புதிய அப்டேட்

WhatsApp - New Update

WhatsApp

புதிய அப்டேட்

பேஸ்புக்
நிறுவனத்திற்கு சொந்தமான,
உலகளவில் மக்களால் அதிகம்
பயன்படுத்தும் உடனடி
தகவல்களை அனுப்பும் தளமான
வாட்ஸ்ஆப் நிறுவனம் தற்போது
ஒரு புதிய அறிவிப்பு
ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த
செயலி அனைத்து மக்களும்
எளிமையான வகையில் பயன்படுத்தும் நோக்கில் உள்ளதால் அதிக
வாடிக்கையாளர்களை கொண்டுள்ளது. இதில் கடந்த ஆண்டு
மிகவும் பிரபலமாக உள்ள
“Disappearing Message”
அம்சத்தை தற்போது அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த அம்சம்
மூலமாக ஒரு Userஆல்
அனுப்பப்பட்ட தகவல்
7
நாட்களில் தானாகவே மறைய
செய்யும்.

இதனை
அமல்படுத்துவது மூலமாக
பல அம்சங்களை வழங்கும்
Telegram
போன்ற செயலிகள் உடன்
போட்டியிட உள்ளது. இந்த
அம்சம் குறித்த அறிவிப்பை
WhatsApp Beta Information
வலைத்தளத்தில் பதிவேற்றம் செய்துள்ளது. இதன் மூலமாக
7
நாட்களில் மறைய வேண்டும்
என்ற விருப்பத்தில் மட்டுமில்லாமல் 24 மணி நேரத்தில் மறைந்து
போகும் விருப்பமும் உள்ளதால்
இது பயனர்களுக்கு கூடுதல்
பயனாக உள்ளது.

இதேபோல
WhatsApp Group
களில் Admin மட்டுமே மறையும்
மெசேஜ்களை கட்டுப்படுத்த முடியும்.
ஆனால் ஒரு குரூப்பில் இருக்கும் அனைவரும் டிஸ்சப்பியரிங் மெசேஜ் முறையை கட்டுப்படுத்த அம்சங்களை ios பயன்பாட்டில் சோதனை
செய்யப்பட்டது. இதனை
WABetaInfo
வலைதள அறிக்கையில் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் user குரல்
குறிப்புகளின் பின்னணி
வேகத்தை மாற்ற புதிய
அம்சம் அமல்படுத்தியுள்ளது. அவை,
1x, 1.5x
மற்றும் 2x இதன் மூலமாக
குரல் வேகத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments