TAMIL MIXER EDUCATION.ன் விருது செய்திகள்
முதலமைச்சர்
கணினித்
தமிழ்
விருதுக்கு தகுதிகள் என்ன…? யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்…?
2021
மற்றும்
2022ம்
ஆண்டு
முதலமைச்சர்
கணினித்
தமிழ்
விருதுக்காகத்
தகுதி
வாய்ந்தோர்
விண்ணப்பிக்கலாம்
என்று
தமிழ்
வளர்ச்சி
இயக்ககம்
தெரிவித்துள்ளது.
இதுகுறித்துத் தமிழ் வளர்ச்சி இயக்ககம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்:
முதலமைச்சர்
கணினித்
தமிழ்
விருதுக்கான
2021 மற்றும்
2022ம்
ஆண்டு
விண்ணப்பங்கள்
வரவேற்கப்படுகின்றன.
தகவல்
தொழில்நுட்ப வளர்ச்சிக்கேற்ப,
உலகமெலாம்
கணினி
வழித்
தமிழ்
மொழி
பரவச்
செய்யும்
வகையில்
கணினித்
தமிழ்
வளர்ச்சிக்காக
சிறந்த
தமிழ்
மென்பொருள்
உருவாக்குபவர்களை
ஊக்குவிக்கும்
வகையில்
தமிழ்
வளர்ச்சித்
துறை
வாயிலாக
முதலமைச்சர்
கணினித்
தமிழ்
விருது
என்ற
பெயரில்
விருது
வழங்கப்பட்டு
வருகிறது.
விருது பெறுபவருக்கு
விருதுத்
தொகையாக
ரூபாய்
2 இலட்சம்,
ஒரு
சவரன்
தங்கப்பதக்கம்
மற்றும்
தகுதியுரை
வழங்கப்படுகிறது.
அந்த வகையில்
2021ம்
ஆண்டுக்குரிய
முதலமைச்சர்
கணினித்
தமிழ்
விருதுக்கு
மென்
பொருள்களுக்கான
விண்ணப்பங்கள்
பெறப்பட்டு
பரிசீலனையில்
உள்ளது.
மேலும்
2021ம்
ஆண்டுக்கு
கூடுதல்
விண்ணப்பங்களும்,
2022ம்
ஆண்டுக்கு
தனியர்
மற்றும்
நிறுவனத்திடமிருந்து,
தமிழ்
வளர்ச்சிக்கான
மென்
பொருள்கள்
விண்ணப்பங்களும்
வரவேற்கப்படுகின்றன.
விருதுக்கு அனுப்பப்பட உள்ள மென் பொருள்கள்
2018, 2019, 2020, 2021ம்
ஆண்டுகளில்
தயாரிக்கப்பட்டதாக
இருத்தல்
வேண்டும்.
இவ்விருதுக்குரிய
விண்ணப்பம்
மற்றும்
விதிமுறைகளைத்
தமிழ்
வளர்ச்சித்
துறையின்
வலைக்
தளத்தில்
(www.tamilvalarchithurai.com) இலவசமாகப்
பதிவிறக்கம்
செய்து
கொள்ளலாம்.
விருதுக்கான
விண்ணப்பம்
தமிழ்
வளர்ச்சி
இயக்ககத்திற்கு
வந்து
சேர
வேண்டிய
இறுதி
நாள்:
31.12.2022,
விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி:
தமிழ்
வளர்ச்சி
இயக்குநர்,
தமிழ்
வளர்ச்சி
வளாகம்
முதல்
தளம்,
தமிழ்ச்சாலை,
எழும்பூர்
– 600008.
தொலைபேசி எண்கள்: 044 – 28190412 / 044 – 28190413,
இ–மெயில் முகவரி: tvt.budget@gmail.com
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google


