தமிழக விவசாயிகளுக்கு அதிக கடன் வழங்க
வேண்டும்
தமிழகத்தில் தற்போது கொரோனா வைரஸ்
தொற்றின் காரணமாக கடுமையான
ஊரடங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன்
காரணமாக அனைத்து தரப்பு
மக்களும் பாதிப்புக்கு உள்ளாகி
வருகின்றனர் அதேபோல் விவசாயிகளும் பல இன்னல்களை சந்தித்து
வருகின்றனர். இந்நிலையில் தமிழக
கூட்டுறவுத்துறை அமைச்சர்
இ.பெரியசாமி அவர்கள்
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர்
அலுவலகத்தில் இருந்து
காணொளி மூலம் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.
இந்த
ஆலோசனையில் அனைத்து மாவட்ட
அதிகாரிகளும் கலந்து
கொண்டனர். இந்த கூட்டத்தில் அமைச்சர் பெரியசாமி அவர்கள்
கூறியதாவது, ஊரடங்கு காலத்தில்
விவசாயிகள் அனைவரும் பயன்பெறும் வகையில் கூட்டுறவு வங்கிகளில் அதிக அளவில் கடன்
வழங்க வேண்டும் என்று
உத்தரவிட்டார். அதுமட்டுமல்லாமல் விவசாயிகள் பயிர்க்கடன் கேட்டு வழங்கும் மனுக்கள்
மீது விரைந்து நடவடிக்கை
எடுக்க வேண்டும் என்றும்
அனைத்து விவசாயிகளுக்கும் கடன்
கிடைக்க வழிவகை செய்ய
வேண்டும் என்றும் தெரிவித்தார்.
இதனை
தொடர்ந்து வருகிற நாட்களில்
காவிரி, வைகை ஆறுகளில்
தண்ணீர் திறந்துவிட இருப்பதால் விவசாயிகள் பணிகளை மேற்கொள்வதற்கான தக்க உரங்களை இருப்பு
வைத்துக்கொள்ள வேண்டும்
என்று தெரிவித்தார். அதேபோல்
மகளிர் சுயஉதவி குழுக்களுக்கும் அதிக அளவில் கடன்
வழங்க வேண்டும் என்றும்
மாநில முழுவதும் சிறு
வணிக கடன்கள் அதிக
அளவில் வழங்கப்பட்டு இருக்கிறது, கடனை திருப்பி செலுத்தும் சிறு வணிகர்களுக்கு கூடுதல்
கடன் வழங்க வேண்டும்
என்றும் அவர் உத்தரவிட்டார்.