தமிழகத்தில் இலவச
உணவு வழங்கும் திட்டம்
தமிழகத்தில் அதிமுக தலைமையிலான அரசு,
ஏழை எளிய மக்களின்
பசி தீர்க்கும் வகையில்
அம்மா உணவகம் என்ற
உணவு வழங்கும் திட்டத்தை
துவங்கியது. இதன் கீழ்
ஒரு நாளைக்கு மூன்று
வேளையும், மிக குறைந்த
விலையில் உணவு விநியோகம்
செய்யப்பட்டு வருகிறது.
இந்த அம்மா உணவகத்தின் மூலம் பல ஆயிரக்கணக்கான ஏழை மக்கள் தங்கள்
பசியாற்றி வருகின்றனர்.
இந்த
நிலையில் தமிழகத்தில் தற்போது
ஆட்சியமைத்துள்ள திமுக
தலைமையிலான அரசு, அம்மா
உணவகங்களை செயல்படுத்த அனுமதி
கொடுக்குமா என்ற கேள்விகள்
எழுந்தது. ஆனால் முக
ஸ்டாலின் தலைமையிலான அரசு,
அம்மா உணவகம் தொடர்ந்து
செயல்படுத்தப்படும் என
அறிவித்துள்ளது, மக்கள்
மத்தியில் மிகுந்த வரவேற்பை
பெற்றது. இதனால் பல
திமுக அமைச்சர்களும் அம்மா
உணவகம் செயல்படுவதற்கு நிதிகளை
அளித்து வருகின்றனர்.
அந்த
வகையில் கோவை மாவட்டத்தில் உள்ள 12 உணவகங்கள், வால்பாறை,
மேட்டுப்பாளையம், பொள்ளாச்சி பகுதிகளில் உள்ள 15 அம்மா
உணவகங்களில் இலவச உணவு
வழங்குவதற்கு, 52.5 லட்சம்
ரூபாய் வழங்கப்படும் என
திமுக அமைச்சர்கள் சக்கரபாணி
மற்றும் ராமச்சந்திரன் ஆகியோர்
தெரிவித்துள்ளனர்.
இதன்
அடிப்படையில் ஊரடங்கு
காலத்திலும், கோவை மாநகரில்
உள்ள ஏழை எளிய
மக்களின் பசி தீர்க்கும் வகையில் இலவச உணவு
வழங்கப்படும் என
தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.