தொழில் பழகுனர் பயிற்சி முகாம் – திருவள்ளூர்
திருவள்ளூர் கலெக்டர் த.பிரபுசங்கர் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:திருவள்ளூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையத்தில், வரும், 10ம் தேதி பல்வேறு தொழிற் பிரிவுகளை சார்ந்த பயிற்சியாளர்களுக்கு, பிரதமர் தொழிற் பழகுனர் சேர்க்கை முகாம் நடைபெற உள்ளது.
முகாமில் ஐ.டி.ஐ., தேர்ச்சி பெற்றோர், தொழிற் பழகுனர் பயிற்சியில் சேர்ந்து, மத்திய அரசின் ‘நாக்’ சான்றிதழ் பெற்று பயனடையலாம். இச்சான்றிதழ் பெற்றோருக்கு, அரசு வேலைவாய்ப்பில் முன்னுரிமை, சுய தொழில் துவங்க மாவட்ட தொழில் மையம் மற்றும் வங்கி கடன் உதவி கிடைக்கும்.
மேலும் விபரங்களுக்கு, உதவி இயக்குனர், மாவட்ட திறன் பயிற்சி அலுவலகம், திருவள்ளூர் என்ற முகவரியில் நேரிலோ அல்லது ricentreambattur@gmail.com என்ற ‘இமெயில்’ மற்றும் 94990 55663, 87784 52515, 94441 39373 ஆகிய மொபைல் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
Follow @ Google: புதிய வேலைவாய்ப்பு செய்திகள் மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள் – Click Here to Follow