கடலூா் மாவட்டத்தில் வாகனங்கள் ஜன.5ம்
தேதி ஏலம்
கடலூா்
மாவட்டத்தில் பல்வேறு
வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட 800க்கும் மேற்பட்ட வாகனங்கள்
ஏலம் விடப்பட உள்ளதாக
தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதுகுறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சி.சக்திகணேசன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
TNPSC, TRB, TET, SSC, RAILWAY – All Exam Notes & PDFs in One Place
கடலூா்
மாவட்டத்தில் உள்ள
பல்வேறு காவல் நிலையங்களில் வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்டு, உரிமம் கோரப்படாமல் உள்ள
வாகனங்களை அரசுடமையாக்கி விற்பனை
செய்து அரசுக்கு வருவாய்
ஈட்ட முடிவெடுக்கப்பட்டது.
அதன்படி,
உரிமம் கோரப்படாமல் உள்ள
853 இருசக்கர வாகனங்கள், 4 ஆட்டோக்கள், 3 கார்கள் ஏலம் விடப்பட
உள்ளன. இதற்காக வரும்
5-ஆம் தேதி முதல்
8-ஆம் தேதி வரை
கடலூா் மாவட்ட காவல்
கண்காணிப்பாளா் அலுவலகம்
அருகே உள்ள காவலா்
குடியிருப்பு மைதானத்தில் பொது ஏலம் விடப்படுகிறது. மேலும், அரசு காவல்
வாகனங்களான 19 இருசக்கர வாகனங்கள்,
8 ஜீப், 2 டெம்போ டிராவலா்,
ஒரு மினி பேருந்தும் ஏலம் விடப்படுகிறது.
விருப்பமுள்ளவா்கள் ஜன. 5ம்
தேதி காலை 8 மணியளவில்
இருசக்கர வாகனத்துக்கு ரூ.ஆயிரமும்,
3 சக்கர வாகனத்துக்கு ரூ.3
ஆயிரமும், 4 சக்கர வாகனத்துக்கு ரூ.5 ஆயிரமும் கட்டி
டோக்கன் பெற்று ஏலத்தில்
பங்கேற்கலாம். ஏலம்
எடுக்காதபட்சத்தில் இந்தத்
தொகை திரும்ப வழங்கப்படும். ஏலத் தொகையுடன் ஜிஎஸ்டி
வரியும் சோ்த்து செலுத்த
வேண்டும். வாகனத்தை ஏலம்
எடுக்க விரும்புவோர் அதை
மேற்கூறிய இடத்துக்கு வந்து
பார்வையிடலாம்.
ஏலத்தில்
பங்கேற்க விரும்புவோர் ஆதார்
அட்டை, வாக்காளா் அட்டை,
ஓட்டுநா் உரிமம், குடும்ப
அட்டை ஆகியவற்றில் ஏதேனும்
ஒரு அடையாள அட்டையை
கண்டிப்பாக வழங்க வேண்டும்
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram


