HomeBlogமே.1 முதல் நாடுமுழுவதும் 18 வயது மேற்பட்டோருக்கு தடுப்பூசி
- Advertisment -

மே.1 முதல் நாடுமுழுவதும் 18 வயது மேற்பட்டோருக்கு தடுப்பூசி

Vaccination for people over 18 years of age nationwide from May 1

மே.1 முதல்
நாடுமுழுவதும் 18 வயது
மேற்பட்டோருக்கு தடுப்பூசி

நாடுமுழுவதும் மே 1 முதல் 18 வயது
மேற்பட்டோருக்கு தடுப்பூசி
செலுத்திக்கொள்ள மத்திய
அரசு அனுமதி அளித்துள்ளது.

முன்னதாக,
45
வயதுக்குமேற்பட்டோருக்கு கொரோனா
தடுப்பூசி போடப்பட்டுவந்த நிலையில்,
தற்போது அந்த வயது
வரம்பை 18 ஆக குறைத்து
அனுமதி அளித்துள்ளது மத்திய
அரசு. பிரதமர் நரேந்திரமோடி, இன்று மாலையில், மருத்துவ
நிபுணர்கள், மருந்து நிறுவனங்களுடன் வீடியோ கான்பரன்ஸ் மூலம்
ஆலோசனை நடத்தினார். இந்த
ஆலோசனைக்கு பின்னர் இந்த
உத்தரவு பிறக்கப்பட்டுள்ளது.

நாட்டில்
உள்ள மருந்துகடைகளிலும் கொரோனா
தடுப்பூசி விற்பனை செய்ய
மத்திய அரசு அனுமதி
அளித்துள்ளது. மேலும்
உற்பத்தியாகும் 50 சதவீத
தடுப்பூசிகளை மத்திய
அரசுக்கு அளிக்க வேண்டும்.
மீதமுள்ள 50 சதவீத தடுப்பூசிகளை மாநில அரசுகளுக்கும், பொதுசந்தை
விற்பனைக்கும் அளிக்கலாம் என மத்திய அரசு
உத்தரவிட்டுள்ளது. இந்த
அடிப்படையில், நாடுமுழுவதும் மே 1 முதல் 18 வயதுக்கு
மேற்பட்டவர்களும் தடுப்பூசி
போட அனுமதி அளித்துள்ளது மத்திய அரசு.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -