மத்திய அரசு
நிறுவனங்களில் காலிப்பணியிடங்கள் – கல்வி அமைச்சர்
42 மத்திய
பல்கலைக்கழகங்களில் SC,
ST மற்றும் மற்ற
பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கான காலியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளதாக மத்திய கல்வி
அமைச்சர் தெரிவித்துள்ளார்.
மத்திய
அரசு பணியிடங்கள் இடஒதுக்கீடு அடிப்படையில் நிரப்பப்படுவது குறித்து காங்கிரஸ் கட்சியினர் கேட்ட கேள்வி மத்திய
கல்வி அமைச்சர் பதில்
அளித்துள்ளார்.
அதில்
OBC, SC, ST
பிரிவினருக்கு இடஒதுக்கீடு முறையில் பெரும்பாலான பேராசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளதாக
தகவல் வெளியானது.
SC
பிரிவினர்:
39 சதவிகித பணியிடங்கள்
ST
பிரிவினர்:
42 சதவிகித பணியிடங்கள்
பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்: 52 சதவிகித
பணியிடங்கள் காலியாக உள்ளது.
இந்திரா
காந்தி பல்கலைக்கழகத்தில் தாழ்த்தப்பட்டவர்களுக்கான 41 சதவிகித பணியிடங்களும், பழங்குடியின பிரிவினருக்கான 49 சதவிகித
பணியிடங்களும், OBC
பிரிவினருக்கான 67 சதவிகித
பணியிடங்களும் காலியாக
உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய
மேலாண்மை கல்வி நிறுவனத்தில் (IIM) தாழ்த்தப்பட்டோருக்கு 60 சதவீத
பணியிடங்களும், பழங்குடியினருக்கு சுமார் 80 சதவிகித
பணியிடங்களும், நிரப்பப்படாமல் உள்ளது. ST பிரிவினருக்கு ஒதுக்கப்பட்ட 24 இடங்களில்
5 பணியிடங்கள் மட்டுமே நிரப்பப்பட்டுள்ளதாக அவர் வெளியிட்ட
அறிவிப்பு மூலமாக வெளிச்சத்திற்கு வந்துள்ளது.