மீனவ பட்டதாரி இளைஞர்களுக்கு குடிமைப் பணிக்கான போட்டி தேர்வுக்கு பயிற்சி
சென்னை, மீன்வளத் துறை மற்றும் சென்னை அகில இந்திய குடிமைப் பணி பயிற்சி நிலையம் இணைந்து, ஆண்டுதோறும் 20 மீனவ பட்டதாரி இளைஞர்களுக்கு, குடிமைப் பணிக்கான போட்டித் தேர்வுக்காக, ஆயத்த பயிற்சி அளித்து வருகிறது.அதன்படி, கடல் மற்றும் உள்நாட்டு மீனவ கூட்டுறவு சங்க உறுப்பினர்கள் மற்றும் மீனவர் நலவாரிய உறுப்பினர்களின் வாரிசு பட்டதாரி இளைஞர்கள் இப்பயிற்சி திட்டத்தில் சேர்ந்து பயன் பெறலாம்.
அதற்கான விண்ணப்பங்களை, www.fisheries.tn.gov.in இணையதளத்தில் அல்லது நலத்துறை அலுவலகத்தில் பெற்றுக் கொள்ளலாம்.விபரங்களுக்கு, மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை, உதவி இயக்குனர் அலுவலகம், எண்.77, சூரியநாராயண செட்டி தெரு, ராயபுரம், சென்னை – 13, என்ற முகவரியை அணுகலாம்.
மேலும் 93848 24245, 93848 24407 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம் என, மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
Follow @ Google: புதிய வேலைவாய்ப்பு செய்திகள் மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள் – Click Here to Follow