HomeBlogவேலைவாய்ப்பு இல்லாத இளைஞர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்

வேலைவாய்ப்பு இல்லாத இளைஞர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்

Unemployed youth can apply for the scholarship

வேலைவாய்ப்பு இல்லாத
இளைஞர்கள் உதவித்தொகை பெற
விண்ணப்பிக்கலாம்

தமிழக
அரசின் சார்பில் படித்த
வேலைவாய்ப்பற்றோர்களுக்கு உதவித்தொகை வழங்கும் திட்டம் செயற்படுத்தப்பட்டு வருகிறது. இதன்படி
மாதம் ஒன்றுக்கு SSLC தேர்ச்சி
பெறாதவர்களுக்கு ரூ.200,
SSLC
தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.300,
மேல்நிலைக்கல்வி (12ம் வகுப்பு)
படித்தவர்களுக்கு ரூ.400-ம், பட்டதாரிகளுக்கு, ரூ.600 வழங்கப்பட்டு வருகிறது.

மாற்றுத்திறனாளிகளுக்கு SSLC மற்றும் அதற்கு
கீழ் படித்தவர்களுக்கு ரூ.600,
மேல்நிலைக்கல்வி தேர்ச்சி
பெற்றவர்களுக்கு ரூ.750
பட்டதாரிகளுக்கு ரூ.1000
வழங்கப்பட்டு வருகிறது.
இத்திட்டத்தில் 31.03.2022 உடன் முடிவடையும் காலாண்டிற்கு கீழ்கண்ட
தகுதியுடைய படித்த வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகைபெற, விண்ணப்பங்கள் மாவட்ட வேலைவாய்ப்பு. அலுவலகத்தில் இலவசமாக
வழங்கப்படவுள்ளது.

மேற்கண்ட
கல்வித் தகுதியியை வேலைவாய்ப்பகத்தில் பதிவு செய்து
5
ஆண்டுகளுக்கு மேல் பதிவினை
தொடர்ந்து புதுப்பித்தல் செய்திருத்தல் வேண்டும். மாற்றுத்திறனாளிகள் பதிவுசெய்து ஒரு
வருடம் பூர்த்தி செய்திருத்தல் வேண்டும். SC,ST பிரிவினருக்கு 31.03.2022 அன்று 45 வயதும், மற்றவர்களுக்கு 40 வயதும் கடந்திருக்கக் கூடாது.
விண்ணப்பதாரரின் குடும்ப
வருமானம் ஆண்டிற்கு
ரூ.72,000-க்கு மிகையாமல் இருக்கவேண்டும்.

குறிப்பு: PDF பதிவிறக்கம் ஆகவில்லை என்றால் VPN அல்லது மற்றொரு நெட்வொர்க் முயற்சி செய்யுங்கள். நன்றி 🙏

மாற்றுத்திறனாளிகளுக்கு வருமாக உச்சசரம்பு இல்லை. விண்ணப்பதாரர் பள்ளி
அல்லது கல்லூரியில் நேரிடையாக
படித்துக்கொண்டிருக்க கூடாது.
(
அஞ்சல் வழியில் படிக்கலாம்) பொறியியல், மருத்துவம், விவசாயம் கால்நடை
அறிவியல் மற்றும் இது
போன்ற தொழில்நுட்பப்பட்டம் பெற்றவர்கள் இவ்வுதவித்தொகை பெறத்தகுதியற்றவர்கள்.

இவ்வுதவித்தொகை பெற முதல் முறையாக
விண்ணப்பிக்க விரும்பும் தகுதியுடையவர்கள் விண்ணப்ப
படிவங்களை தருமபுரி மாகட்ட
வேலைவாய்ப்பு அலுவலகத்திலிருந்து பெற்று பூரித்தி
செய்து விண்ணப்பத்தினை தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் துவக்கப்பட்ட கணக்குப்புத்தகம் மற்றும் விண்ணப்பத்தில் குறிப்பிடப்பட்ட பிற
சான்றுகளுடன் 28.02.2022 வரை
தருமபுரி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நேரில் அளித்திடுமாறும், மேலும், ஏற்கனவே
உதவித்தொகை பெற்று மூன்றாண்டு காலம் நிறைவுபெறாமல் 2021 2022-ம் நிதியாண்டிற்கு சுயஉறுதி ஆவணம் அளிக்காதவர்கள், 28.02.2022-க்குள் சுய
உறுதிமொழி ஆவணம் அளித்து
தொடர்ந்து உதவித்தொகை பெற்று
பயன்பெறுமாறு மாவட்ட
ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளார்.

🔔 For more updates & free PDFs, join or follow us below 👇

💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google Printing at 50 paise
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular