HomeBlogதமிழ்நாடு காவல்துறையில் 10,000 காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும்
- Advertisment -

தமிழ்நாடு காவல்துறையில் 10,000 காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும்

10,000 vacancies will be filled in the Tamil Nadu Police

தமிழ்நாடு
காவல்துறையில் 10,000 காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும்

தமிழகத்தில் அரசு துறைகளில் உள்ள காலிப்பணியிடங்கள் குறித்த அறிவிப்பு தற்போது வெளியாகி வருகிறது. அந்த வகையில் இந்த வருடம் குரூப்-2 தேர்வின் கீழ் 5,831 காலிப்பணியிடங்கள் போட்டி தேர்வின் மூலம் நிரப்பப்படும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் குரூப்-4 தேர்வின் கீழ் காலியாக உள்ள 5,255 பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் என்று தேர்வாணையம் தெரிவித்துள்ளது.

அதேபோல் மற்ற துறைகளை தொடர்ந்து காவல்துறையிலும் காலிப்பணியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தமிழகத்தில் சீருடை பணியாளர் தேர்வாணையம் மூலம் தீயணைப்பு வீரர்கள், சிறைக்காவலர்கள், காவலர் போன்ற இரண்டாம் நிலை காவலர் பணியிடங்களுக்கு போட்டி தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. அதில் தேர்ச்சி பெற்றவர்கள் காவலர் பணிக்கு நியமிக்கப்படுகின்றனர்.

கடந்த 2020-ஆம்
ஆண்டில் கடைசியாக TNUSRB பணியிடங்களுக்கான தேர்வு நடைபெற்றது. அதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு உடல்தகுதி தேர்வு கடந்த 2021-ஆம்
ஆண்டில் நடத்தப்பட்டு சான்றிதழ் சரிபார்ப்பு பணிகள் நடைபெற்று முடிவடைந்தது. அதனைத் தொடர்ந்து தேர்ச்சி பெற்றவர்களுக்கு பிப்ரவரி 1ம் தேதி பயிற்சி அளிக்கப்பட்டிருந்தது. ஆனால் கொரோனா மூன்றாவது அலை தாக்கம் காரணமாக மார்ச் 1ம் தேதிக்கு பயிற்சி ஒத்திவைக்கப்பட்டது.

ஏற்கனவே சப்இன்ஸ்பெக்டர்கள் 500 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில் மீண்டும் காலிப்பணியிடங்கள் குறித்த அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. அதாவது டிஜிபி சைலேந்திரபாபு தமிழக காவல்துறையில் 2022ம் ஆண்டில் புதிதாக 10,000 காவலர்கள்
தேர்வு செய்யப்பட உள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும் காவல் துறையில் பணிபுரிய வேண்டும் என்ற இலட்சியம் உள்ளவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -