TAMIL MIXER EDUCATION.ன்
UGC NET செய்திகள்
தொழில்நுட்பப்
பிரச்சினையால்
நிறுத்தப்பட்ட
யுஜிசி
நெட்
தேர்வு
– மறுதேதி
அறிவிப்பு
தொழில்நுட்பப்
பிரச்சினையால்
நிறுத்தப்பட்ட
2021 டிசம்பர்
மாத
தேசியத்
தகுதித்
தேர்வுக்கான
(நெட்)
மறுதேதிகளை
தேசியத்
தேர்வுகள்
முகமை
வெளியிட்டுள்ளது.
இந்தியாவில் உள்ள கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களில்
உதவி
பேராசிரியர்
பணிக்கான
தகுதியையும்,
இளையர்
இளநிலை
ஆராய்ச்சியாளர்
உதவித்தொகை
(Junior Research Fellowship-JRF) பெறவும் நெட் தேர்வு எனப்படும் தேசியத் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.
இந்தத் தேர்வு தேசியத் தேர்வுகள் முகமையால் (NTA) நடத்தப்படுகிறது.
மொத்தம்
84 பாடங்களுக்கு
நடைபெறும்
இத்தேர்வு,
ஆண்டுதோறும்
2 முறை
நடத்தப்படுகிறது.
2020ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்துக்கான
யுஜிசி
நெட்
தேர்வு
மே
மாதம்நடைபெறும்
என
முன்னதாக
அறிவிக்கப்பட்டது.
இதற்கிடையே
கரோனா
பரவலால்
கடந்த
2020 டிசம்பர்,
2021 ஜூன்
மாதங்களில்
நெட்
தேர்வு
நடத்தப்படவில்லை.
இதையடுத்து,
2 வாய்ப்பையும்
சேர்த்து
ஒரேகட்டமாக
நெட்
தேர்வை
நடத்த
தேசியத்
தேர்வுகள்
முகமை
முடிவு
செய்தது.
இதற்கான ஆன்லைன் விண்ணப்பப் பதிவு கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் தொடங்கி நடைபெற்றது. அதையடுத்து நெட் தேர்வுகள் நவம்பர் முதல் ஜனவரி வரையிலான மாதங்களில் நடத்தப்பட்டன.
நாடு
முழுவதும்
239 நகரங்களில்
837 தேர்வு
மையங்களில்
நெட்
தேர்வு
நடைபெற்றது.
இதற்கான
தேர்வு
முடிவுகள்
பிப்ரவரி
மாதம்
வெளியாகின.
2021
டிசம்பர்,
2022 ஜூன்
மாதங்களுக்கான
தேசியத்
தகுதித்
தேர்வு
(நெட்
தேர்வு)
ஒரே
கட்டமாக
நடத்தப்படுகிறது.
கடந்த
மே
30ஆம்
தேதி
இதற்கான
விண்ணப்பப்
பதிவு
முடிவடைந்தது.
2021 டிசம்பர்
தேர்வுகள்
ஜூலை
08, 09 தேதிகளில்
நடைபெற்றது.
மீதமுள்ள
தேர்வுகள்
11, 12ஆம்
தேதிகளில்
நடைபெற
உள்ளது.
2022 ஜூன்
தேர்வுகள்
ஆகஸ்ட்
12, 13, 14 ஆகஸ்ட்
மாதங்களில்
நடைபெற
உள்ளன.
இதற்கிடையே ஜூலை 9ஆம் தேதி நடைபெற்ற யுஜிசி நெட் தேர்வில், சில மாநிலங்களில்
தொழில்நுட்பக்
கோளாறு
ஏற்பட்டது.
குறிப்பாக
உத்தரப்
பிரதேசம்,
கேரளா,
பிஹார்
உள்ளிட்ட
மாநிலங்களில்
இந்தப்
பிரச்சினை
ஏற்பட்டது.
தொழில்நுட்பக்
கோளாறு
காரணமாகத்
தேர்வை
எழுதமுடியாமல்
போனவர்கள்
ஆகஸ்ட்
12 முதல்
14 வரை
நடைபெறும்
நெட்
தேர்வில்,
பங்கேற்றுத்
தேர்வை
எழுதலாம்
என்று
தேசிய
தேர்வு
முகமை
அறிவிப்பு
வெளியிட்டுள்ளது.
கூடுதல் விவரங்களுக்கு:
www.nta.ac.in, ugcnet@nta.ac.in என்ற இணையதள முகவரியைத் தொடர்பு கொள்ளலாம்.
தேர்வர்கள் 011 40759000
என்ற
எண்ணைத்
தொடர்புகொள்ளலாம்.
தேர்வர்கள் இ–மெயில் முகவரி: ugcnet@nta.ac.in
தமிழ்நாடு வேலைவாய்ப்பு குரூப்பில் இணைய: Click Here