TAMIL MIXER EDUCATION.ன் TET செய்திகள்
ஒரே நாளில்
இரு தேர்வுகள் – TET தேர்வு
தேதி வேறு நாளுக்கு
மாற்ற வேண்டும் என,
கோரிக்கை
ஆசிரியர்
தகுதி தேர்வு தேதியை
மாற்ற வேண்டும் என,
பள்ளிக் கல்வித் துறைக்கு,
தேர்வு எழுதுபவர்கள் கோரிக்கை
விடுத்துள்ளனர்.கட்டாய
கல்வி உரிமை சட்டத்தின் படி, அரசு மற்றும்
தனியார் பள்ளிகளில், ஒன்று
முதல், 10ம் வகுப்பு
வரை பாடம் நடத்தும்
பட்டதாரி ஆசிரியர்கள், TET எனும்
தகுதித் தேர்வில், தேர்ச்சி
பெற வேண்டும்.இதன்படி,
இந்த ஆண்டுக்கான ஆசிரியர்
தகுதி தேர்வு, இந்த
ஆண்டு மார்ச்சில் அறிவிக்கப்பட்டு, ஆன்லைன் வழி விண்ணப்பங்கள் பெறப்பட்டன.
விண்ணப்பித்தவர்களில், ஒன்று முதல்
ஐந்தாம் வகுப்பு வரை
பாடம் நடத்தும் தகுதிக்கான, முதல் தாள் தேர்வு,
வரும் 25 முதல் 31 வரை
நடத்தப்படும் என,
ஏற்கனவே அறிவிக்கப்பட்டது.பின்,
நிர்வாக காரணங்களால் இந்த
தேர்வு, அடுத்த மாதம்
10 முதல், 15ம் தேதிக்கு
தள்ளி வைக்கப்பட்டது. இதற்கான
அறிவிப்பு, நேற்று முன்தினம்
வெளியானது.தேர்வு தேதி
மாற்றத்தால், ஆசிரியர்கள் குழப்பத்துக்கு ஆளாகினர். ஏனெனில், அறநிலையத்
துறை செயல் அலுவலர்
பதவிக்கு, டி.என்.பி.எஸ்.சி.,
சார்பில், அடுத்த மாதம்
11ம் தேதி போட்டி
தேர்வு நடத்தப்படுகிறது.இதற்கான
அறிவிப்பு, மே மாதமே
வெளியாகி விட்டதால், ஏராளமான
பட்டதாரிகள், ஆசிரியர் தகுதி
தேர்வு மட்டுமின்றி, டி.என்.பி.எஸ்.சி.,
தேர்வுக்கும் விண்ணப்பித்துள்ளனர்.இரு தேர்வுகளையும் ஒரே காலகட்டத்தில் நடத்தினால், ஏதாவது ஒரு தேர்வை
எழுத முடியாத நிலை
ஏற்படும். மேலும், இரண்டு
தேர்வுகளுக்கும் விண்ணப்பதாரர்கள் பல மாதங்களாக
பயிற்சி எடுத்து வருகின்றனர்.
எனவே,
ஆசிரியர் தகுதி தேர்வு
தேதியை, வேறு நாளுக்கு
மாற்ற வேண்டும் என,
கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழ்நாடு வேலைவாய்ப்பு குரூப்பில் இணைய: Click Here
Follow @ Google: புதிய வேலைவாய்ப்பு செய்திகள் மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள் – Click Here to Follow
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google


