பிளஸ் 2 தேர்வெழுதும் மாற்றுத்திறனாளிகள் சலுகை
கோரி விண்ணப்பிக்கலாம்
பிளஸ்
2 பொதுத் தேர்வெழுதும் மாற்றுத்திறனாளிகள், சலுகை கோரி
விண்ணப்பிக்கலாம் என
அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடா்பாக அரசுத் தேர்வுகள் இயக்குநரின் சுற்றறிக்கை:
பார்வையற்றோர், காது கேளாத மற்றும்
வாய் பேச இயலாதேர்ர், எதிர்பாராத விபத்துகளால் உடல்
ஊனமுற்று தேர்வு எழுத
இயலாதேர்ர், பாரிச வாயு
போன்ற நோயால் பாதிக்கப்பட்டோர் மற்றும் எதிர்பாராத விபத்தினால் கை முறிவு
ஏற்பட்டோர், மனநலம் குன்றியோர், டிஸ்லெக்சியா குறைபாடு,
நரம்பியல் குறைபாடு உள்ளிட்ட
உடல் குறைப்பாட்டின் அடிப்படையில் வழங்கப்படும் சலுகைகள்
குறித்து, பள்ளியில் பிளஸ்
2 பயிலும் மாற்றுத்திறனாளி மாணவா்களுக்கு தலைமையாசிரியா் எடுத்துரைக்க வேண்டும்.
மேலும்,
தேர்வெழுத சலுகைகள் கோரும்
விண்ணப்பத்தை மாணவா்களிடம் பூா்த்தி செய்து பெற்று,
அதனை மருத்துவச் சான்று
உள்ளிட்ட ஆவணங்களுடன் இணைத்து,
ஜன.13ம் தேதிக்குள் சம்பந்தப்பட்ட முதன்மைக்
கல்வி அலுவலகத்தில் ஒப்படைக்க
வேண்டும்.