தமிழ்நாடு வேளாண் பல்கலையில் தயார்நிலை உணவு தயாரித்தல் குறித்த இரண்டு நாள் பயிற்சி வகுப்பு நடைபெறுகிறது.
நவ.,26, 27 ஆகிய தேதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை பல்கலை வளாகத்தில் நடைபெறும். இதில் தோசை மிக்ஸ், டேக்ளா மிக்ஸ், அடை மிக்ஸ், பிசிபெலா பாத் மிக்ஸ், கீர் மிக்ஸ், ஐஸ் கிரீம் மிக்ஸ், தக்காளி சாதம் மிக்ஸ், சூப் மிக்ஸ், குலாப் ஜாமூன் மிக்ஸ் ஆகிய மிக்ஸ்கள் தயாரித்தல் பயிற்சி வழங்கப்படுகின்றன. விருப்பமுள்ளவர்கள் பயிற்சி கட்டணமாக ரூ.1770 செலுத்தி பயிற்சி பெறலாம்.
மேலும் விவரங்களுக்கு: 0422 6611268
மின்னஞ்சல்: phtc@tnau.ac.in