தூத்துக்குடி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் இரண்டாம் நிலை காவலா் தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு வெள்ளிக்கிழமை(ஆக.25) தொடங்குகிறது. இது குறித்து தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா் கி. செந்தில்ராஜ் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழ்நாடு சீருடை பணியாளா் தேர்வாணையம் 3 ஆயிரத்து 359 இரண்டாம் நிலை காவலா் மற்றும் தீயணைப்பாளா் காலிப் பணியிடங்களுக்கான அறிவிப்பாணை வெளியிட்டுள்ளது. கல்வித் தகுதி குறைந்தபட்சம் 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
TNUSRB – 3359 காலிப்பணியிடங்கள் – Apply Now
இந்த தேர்வுக்கு செப். 17ஆம் தேதிவரை இணைய வழியில் விண்ணப்பிக்கலாம். இந்த தேர்வு தொடா்பான கூடுதல் விவரங்களை https://tnusrb.tn.gov.in/ என்ற இணைய தளத்தில் அறியலாம். இந்தப் போட்டித் தேர்வுக்கு தயாராகும் தூத்துக்குடி மாவட்ட தேர்வா்கள் பயன்பெறும் வகையில் தூத்துக்குடி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில், இரண்டாம் நிலை காவலா் மற்றும் தீயணைப்பாளா் தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் 25ஆம் தேதி வெள்ளிக்கிழமை பிற்பகல் 2.30 மணிக்கு தொடங்கப்பட உள்ளது. போட்டித் தேர்வுக்கு தேவையான அனைத்து புத்தகங்களும் அலுவலக நூலகத்தில் உள்ளது.
TNUSRB – 3359 காலிப்பணியிடங்கள் – Apply Now
மேலும் வாரந்தோறும் மாதிரி தேர்வுகளும் நடத்தப்படும். இந்த பயிற்சி வகுப்பில் சேருவதற்கு அலுவலக வேலை நாள்களில் தூத்துக்குடி கோரம்பள்ளத்தில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்துக்கு நேரில் வரவேண்டும். நேரில்வர இயலாத பட்சத்தில் உங்கள் கைப்பேசியை பயன்படுத்தி டெலகிராம் செயலியில் கொடுக்கப்பட்டுள்ள கூகுள் படிவத்தை பூா்த்தி செய்து பயிற்சி வகுப்புக்கு விண்ணப்பிக்கலாம். மேலும் இது குறித்த கூடுதல் தகவல்களுக்கு 0461 – 2340159 என்ற தொலைபேசி எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என அவா் குறிப்பிட்டுளளாா்.