
TNPSC Mock Exam TNPSC குரூப் 4 தேர்வு வருகிற ஜூன் 9-ம் தேதி நடைபெறவிருக்கிறது.
அதிகப்படியான உழைப்பைச் செலுத்தி பலரும் குரூப் 4 தேர்வுக்குத் தயாராகி வருகிறார்கள்.
அவர்களுக்கு உதவும் வகையில் கல்வி விகடனும் நட்ராஜ் இன்ஸ்டிட்யூட் ஆஃப் TNPSC-யும் இணைந்து குரூப்-4 தேர்வுக்கான மாதிரித் தேர்வை நடத்தி வருகிறது. இத்தேர்வு கடந்த மே 5-ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது.
தினம் ஒரு மாதிரித் தேர்வு என்ற அடிப்படையில் ஜூன் 8-ம் வரை தொடர்ந்து நடைபெறும். கிட்டத்தட்ட 35 நாட்களுக்கு இந்த மாதிரித் தேர்வு நடைபெறவிருக்கிறது. அனுபவமுள்ள நிபுணர்கள் பலர் மாணவர்களின் திறனை அதிகரிக்கும் வகையில் சிறப்பான கேள்வித் தாள்களை உருவாக்கியிருக்கிறார்கள். இந்த மாதிரித் தேர்வு தினமும் காலை 9 மணிக்குத் தொடங்கிவிடும். அடுத்த நாள் காலை 9 மணிவரை அந்தத் தேர்வை எழுதலாம். காலை 9 மணிக்குப் பிறகு அந்த நாளுக்கான வினாத்தாள் வெளியாகும். இப்படியான மாதிரித் தேர்வைத் தொடர்ந்து எழுதும்போது நீங்கள் ஏற்கெனவே படித்த பாடங்களை ரிவைஸ் செய்வதற்கு உதவியாக இருக்கும்.
30-வது நாளான இன்றைய மாதிரித் தேர்வு வினாத்தாள் காலை 9 மணிக்கு வெளியாகிவிட்டது. கீழே இணைக்கப்பட்டுள்ள லிங்க்-ஐ கிளிக் செய்து இந்த மாதிரித் தேர்வை உடனடியாக எழுதுங்கள். இந்த மாதிரித் தேர்வு குறித்து விரிவாகத் தெரிந்து கொள்ளக் கீழே கொடுக்கப்பட்டுள்ள தெளிவான விவரங்களைப் படியுங்கள்.
இந்த மாதிரித் தேர்வுக்குக் கட்டணம் எதுவுமில்லை. அனைவருக்கும் இலவசம்தான். ஒவ்வொரு நாளும் நடைபெறும் இந்த மாதிரித் தேர்வு 150 மதிப்பெண்களுக்கு நடத்தப்படும். மொத்தம் 100 கேள்விகள் கேட்கப்படும். 90 நிமிடங்களுக்குள் தேர்வை நிறைவு செய்யவேண்டும். கேட்கப்பட்ட 100 கேள்விகளுக்கு விடையளித்த பிறகு உங்களின் மதிப்பெண்களை நீங்கள் அறியலாம். இதுபோன்ற மாதிரித் தேர்வுகளை நீங்கள் தொடர்ந்து எழுதும்போது எந்தெந்த பகுதிகளில் நீங்கள் தவறு செய்கிறீர்கள் என்பதை கண்டறிந்து திருத்திக் கொள்ள உதவும்.
பழைய வினாத்தாள்கள், பாடத்திட்டங்களிலிருந்து நிபுணர்களால் தேர்வு செய்யப்பட்ட கேள்விகள் இந்த மாதிரித் தேர்வில் கேட்கப்படும். குறிப்பிட்ட நேரத்துக்குள் தேர்வு எழுதிப் பழகுவதற்கும் நீங்கள் படித்தவற்றை நினைவுபடுத்திப் பார்ப்பதற்கும் குரூப் 4 தேர்வில் நல்ல மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெறுவதற்கும் இந்த மாதிரித் தேர்வு உங்களுக்கு உதவும்.
இங்கு https://special.vikatan.com/tnpsc-group-4-mock-test-2024/ க்ளிக் செய்து உடனடியாக இந்த தேர்வை எழுதுங்கள். மேலும் நீங்கள் பெற்ற மதிப்பெண்களை கீழே கமென்ட் பாக்ஸில் பதிவிடுங்கள்
உங்களிடம் உள்ள PDF Files PRINT வேண்டுமென்றாலும் தொடர்பு கொள்ளவும் (Whatsapp): +91 80720 26676 – 1 Page (50 Paise Only)
Follow @ Google: புதிய வேலைவாய்ப்பு செய்திகள் மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள் – Click Here to Follow
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google

