போட்டித் தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்பு: திருவள்ளூர்
திருவள்ளூா் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்பட்டு வரும் தன்னாா்வப் பயிலும் வட்டம் மூலம் குரூப்-1 தோ்வு உள்பட பல்வேறு போட்டித் தோ்வுக்கான பயிற்சி வகுப்பில் பங்கேற்று பயன்பெறலாம் என ஆட்சியா் த.பிரபு சங்கா் தெரிவித்துள்ளாா்.
இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையால் 38 மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையங்களில் செயல்படும் தன்னாா்வப் பயிலும் வட்டங்கள் மூலம் தமிழ்நாடு அரசு பணியாளா் தோ்வாணையம் உள்ளிட்ட பல்வேறு போட்டி தோ்வுகளுக்கு விண்ணப்பித்த இளைஞா்கள் பயன்பெறும் வகையில் பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.
இந்தப் பயிற்சி வகுப்பு மூலம் பயிற்சி பெற்ற மாணவ, மாணவிகள் போட்டித் தோ்வுகளில் தோ்ச்சி பெற்று அரசு வேலைவாய்ப்புகளை பெற்றுள்ளனா்.
இதேபோல், திருவள்ளூா் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நேரில் வருகை புரிந்து பயிற்சி வகுப்பில் பங்கேற்கலாம்.
தற்போதைய நிலையில், தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையத்தால் அறிவிக்கப்பட்டுள்ள தொகுதி-1 தோ்வுக்கு 90 காலிப் பணியிடங்களுக்கான அறிவிப்பு 28-03-2024 அன்று வெளியானது.
இந்த தொகுதி-1 முதல்நிலைத் தோ்வுக்கு இலவச பயிற்சி வகுப்புகள், இந்த மையத்தில் செயல்படும் தன்னாா்வ பயிலும் வட்டத்தில் சிறந்த பயிற்றுநா்களைக் கொண்டு நடத்தப்பட உள்ளது. அத்துடன் அதிக அளவிலான பயிற்சி தோ்வுகளும் மற்றும் மாநில அளவிலான மாதிரி தோ்வுகளும் நடத்தப்படவுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், இது குறித்து 9790488034 என்ற கைப்பேசி எண்ணில் தொடா்பு கொண்டு விவரங்களை அறிந்து கொள்ளலாம்.
உங்களிடம் உள்ள PDF Files PRINT வேண்டுமென்றாலும் தொடர்பு கொள்ளவும் (Whatsapp): +91 80720 26676 – 1 Page (50 Paise Only)
Follow @ Google: புதிய வேலைவாய்ப்பு செய்திகள் மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள் – Click Here to Follow