TNPSC, TRB, TET, SSC, RAILWAY – All Exam Notes & PDFs in One Place
TNPSC Group 4 தேர்வு – தேர்வில் வெற்றி பெற முக்கிய குறிப்புகள்
பொதுத்தமிழ்
பகுதி ஆ பாடப்பிரிவில் (இலக்கணம்): எதுகை, மோனை, இலக்கண குறிப்பறிதல், பிழை திருத்தம், தொடரும் தொடர்பு அறிதல், பெயர்ச்சொல்லின் வகையறிதல், ஆகிய பகுதிகளுக்கான இலக்கண விதிகளை நன்கு நினைவுப்படுத்திக் கொள்ள வேண்டும்.
TNPSC, TNUSRB – கையால் எழுதப்பட்ட 6 முதல் 10வது தமிழ் குறிப்புகள் PDF – Download Here
பகுதி ஆ (தமிழ் இலக்கணம்): பாடப்பிரிவில் திருக்குறள், பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள், சிற்றிலக்கியங்கள், இலக்கிய மேற்கோள்கள், சமய முன்னோடிகள், தொடர்பான பகுதிகளில் நன்கு கவனம் செலுத்த வேண்டும்.
பகுதி இ (தமிழ் அறிஞர்களும் தமிழ்த் தொண்டும்): பாடப்பிரிவில் தமிழ் அறிஞர்களின் புனைப் பெயர்கள், இயற்றிய நூல்கள், விருது பெற்ற நூல்கள், அடைமொழிகள், அறிஞர்கள் தொடர்பான செய்திகள் குறித்து நன்கு அறிந்திருக்க வேண்டும்.
தமிழ் அறிஞர்களும், தமிழ் தொண்டும் – பொதுத்தமிழ் – பகுதி இ – PDF – Download Here
பொது அறிவு
பொது அறிவு வினாக்களை பொறுத்தவரை திறனறி மற்றும் அறிவுக்கூர்மை தவிர அரசியலமைப்பு, வரலாறு, புவியியல், தமிழ்நாட்டின் வரலாறு, மரபு, பண்பாடு மற்றும் சமூக அரசியல் இயக்கங்கள், தமிழகத்தின் வளர்ச்சி நிர்வாகம், அறிவியல் என அனைத்து பாடப்பிரிவுகளையும் மீள்பார்வை செய்ய வேண்டும்.
அறிவு கூர்மை மற்றும் திறனறிவு தொடர்பான பாடங்களில் அறிவுக்கூர்மை தொடர்பான சூத்திரங்கள் (Formulas) மற்றும் முறைகளை (Methods) நன்கு நினைவில் நிறுத்திக் கொள்ள வேண்டும்.
பொது அறிவு மற்றும் நடப்பு நிகழ்வுகள் பாடங்களில், முக்கிய தினங்கள், ஆண்டு, விருதுகள், முக்கிய நூல்கள், முக்கிய நபர்கள், சர்வதேச மாநாடுகள், செய்திகளில் பேசப்பட்ட இடங்கள், மத்திய மற்றும் மாநில அரசின் நலத்திட்டங்கள் ஆகியவற்றிற்கான குறிப்புகளை தேர்வர்கள் மீள்பார்வை செய்து கொள்ள வேண்டும்.
அரசியல் அறிவியல் பாடத்தினை பொறுத்தவரை முக்கியமான சரத்துக்கள், சட்ட திருத்தங்கள், அட்டவணைகள் மற்றும் பகுதிகள் (Parts) ஆகியவற்றை நினைவு கூறுவது அவசியம் ஆகும்.
புவியியல் பாடத்தை பொருத்தவரை மலைத்தொடர்கள், ஆறுகள், காலநிலை, உலோக தாதுக்கள் கிடைக்கும் இடங்கள், காடுகள், நீர்த்தேக்கங்கள் இவை தொடர்பான குறிப்புகளை படித்துக் கொள்ள வேண்டும்.
பொருளாதார பாடப்பிரிவில் திட்ட காலங்கள் மற்றும் அத்திட்டத்திற்கான மையக்கரு, நலத்திட்டங்கள் அவை நடைமுறைப்படுத்தப்பட்ட ஆண்டு மற்றும் திட்டங்கள் யாருடைய ஆட்சி காலத்தில் நிறைவேற்றப்பட்டது என்பதையும் முக்கிய பொருளாதாரம் கோட்பாடுகளையும் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டியது அவசியமாகும். மேலும் மக்கள் தொகை கணக்கெடுப்பு (2011) பற்றிய குறிப்புகளையும் நினைவில் கொள்வது அவசியம்.
மேலும் தமிழகம் தொடர்பான வரலாறு, புவியியல், இலக்கிய,ம் திட்டங்கள் மற்றும் நடப்பு கால நிகழ்வுகள் குறித்து விரிவாக பயின்றுள்ளதாக மீள்பார்வை செய்யவும்.
TNPSC அசல் வினாத்தாள்
2018, 2019, 2020, 2021, 2022 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற TNPSC தேர்வு வினா தாள்களை பயிற்சி செய்ய வேண்டும். அவ்வாறு செய்வது மொழி பாடங்களுக்கு மிகுந்த பயணையும் பொது அறிவிற்கு கேட்கப்படும் வினாக்களின் தன்மையையும் அறிய உதவும்.
Previous Year Question Papers Download Here
தேர்வு நாள் அன்று முன்னதாகவே தேர்வு மையத்தில் இருக்க வேண்டும்.
வினாத்தாளினை பெற்றவுடன், வினாத்தாளின் பக்கங்கள் மற்றும் கேள்வி எண்கள் சரியாக உள்ளதா என்பதை சோதித்துக் கொள்ளவும். ஏனெனில் ஏதேனும் குறைபாடு இருப்பின் உடனே அரை மேற்பார்வையாளரிடம் தெரிவித்து வேறு வினாத்தாளினை பெற இயலும். வினாத்தாளில் உள்ள வரிசை என்னை விடைத்தாளில் அளிக்கப்பட்டுள்ள தகுந்த இடத்தில் பூர்த்தி செய்து கொள்ள வேண்டும்.
விடைத்தாளினை பூர்த்தி செய்த பின், நன்றாக படித்த பாடப்பிரிவுகளில் உள்ள வினாக்களுக்கு விடையளிக்க தொடங்கலாம். உதாரணமாக பொது தமிழ் பாடப்பிரிவில் சிறந்தவராக இருந்தால் பொது தமிழ் கேள்விகளுக்கு முதலில் விடை அளிக்க தொடங்கலாம் அல்லது அறிவுக்கூர்மை மற்றும் திறனறிதலில் சிறப்பானவராக இருந்தால் அந்த வினாக்களில் இருந்து பதில் அளிக்க தொடங்கலாம்.
வினாவினை படித்த பின்பு அதற்கு அளிக்கப்பட்டுள்ள அனைத்து OPTION களையும் நன்கு படித்த பின்பே விடை காண OPTION ஐ தேர்வு செய்ய வேண்டும்.
வினாக்களை படித்து வினாவிற்கு விடை தெரியுமாயின் விடைத்தாளில் விடையினை குறிக்கும் பொழுது மீண்டும் ஒருமுறை வினா என்னும் விடைத்தாளில் உள்ள வரிசை என்னும் ஒன்றாக உள்ளதா என்பதை அறிந்து பின்னர் குறிக்க வேண்டும்.
குழப்பமான வினாக்களுக்கு உடனே பதில் அளிக்காமல் அடுத்த வினாவிற்கு பதிலளிக்க முயற்சி செய்ய வேண்டும். ஏனெனில் முந்தைய குழப்பமான வினாவிற்கான விடை பின்பு வரும் கேள்விகளை படிக்கும் பொழுது உங்கள் நினைவிற்கு வர வாய்ப்புள்ளது.
வினாவினை படித்து அதற்கான விடையை உடனே விளைத்தாலில் குறித்து விட வேண்டும். கடைசியாக குறிக்கும் பழக்கம் ஆபத்தானது. ஏனெனில் விடைத்தாளில் விடையினை குறிப்பதற்கு போதுமான கால அவகாசம் இறுதியில் இல்லாமல் போய்விடும்.
கேள்விகள் ஆங்கிலம் மற்றும் தமிழ் வழியில் கேட்கப்படும். தமிழ் வழியில் வினாவை படித்து விடையளிக்கும் தேர்வாளர்கள் தமிழ் வழி கேள்வியில் ஏதேனும் சந்தேகமா அல்லது பிழையாக இருப்பதாக உணர்ந்தாள் ஆங்கில வழி கேள்வி இணை படித்து பின்பு விடை அளிக்க வேண்டும். ஏனெனில் ஆங்கில வழியில் கேட்கப்பட்டுள்ள கேள்வி பதிலே இறுதியானது.
தேர்வு எழுதும் அனைவருக்கும் வாழ்த்துக்கள்…
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram


