டி.என்.பி.எஸ்.சி., குரூப் 2 மற்றும் குரூப் 4 தேர்வுகளுக்கான முடிவுகள் இன்னும் ஒரு வார காலத்திற்குள் வெளியிடப்படும் என்கிற தகவல் வெளியாகியுள்ளது. தமிழக அரசின் அமைச்சகங்கள் மற்றும் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள 5413 காலிபதவிகளுக்கான குரூப் 2, 2ஏ முதல்நிலை தேர்வை கடந்த மே மாதம் 21ம் தேதி நடைபெற்றது. இந்த தேர்வை தமிழகம் முழுவதிலும் இருந்து 9 லட்சத்து 94 ஆயிரத்து 890 போ் எழுதினர். இதே போல், 7,138 குரூப் 4 காலி பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வு கடந்த மாதம் ஜுலை 24ம் தேதி நடைபெற்றது. குரூப் 2 தேர்வு முடிவுகள் கடந்த ஜூன் மாதத்தில் வெளியிடப்பட்டு, முதன்மை எழுத்துத்தேர்வு செப்டம்பர் மாதம் நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்து. ஆனால் தேர்வு முடிவுகள் குறித்த எந்தவித அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியிடப்படவில்லை.
இந்த சூழலில், குரூப் 2, 2ஏ முதல்நிலை எழுத்துத் தேர்வு முடிவுகள் இம்மாத இறுதிக்குள் வெளியிடப்படும் என்றும் குரூப் 4 எழுத்துத் தேர்வுக்கான முடிவுகள் அக்டோபர் மாதத்தில் வெளியிடப்படும் எனவும் தகவல் வெளியாகியிருந்தது. ஆனால், அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை.
இந்நிலையில், சென்னை உயர்நீதிமன்றம் மகளிருக்கான இட ஒதுக்கீடு குறித்த தீர்ப்பை சமீபத்தில் வழங்கியது. அதில், மகளிருக்கான 30 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் முறையை மாற்ற வேண்டும் என்று தீர்ப்பளித்தது. ஏற்கனவே மகளிருக்கான இட ஒதுக்கீட்டுக்கீட்டில் நடைமுறையில் இருந்த செங்குத்து நகர்வுக்கு பதில் கிடைமட்ட நகர்வு முறை பின்பற்ற வேண்டும் என்றும், உயர்நீதிமன்றம் தெரிவித்திருந்தது.
புதிய நடைமுறையின் படி தேர்வு முடிவுகளை வெளியிட காலதாமதம் ஆனதாக தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து குரூப் 2, குரூப் 4 தேர்வு முடிவுகள் இந்த மாத இறுதியில் வெளியிடப்படும் என்ற தகவல் வெளியாகியுள்ளது. சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பின் அடிப்படையில் கலந்தாய்வு நடைபெற்று பணி நியமன ஆணைகள் வழங்கப்படும் என டிஎன்பிஎஸ்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google


