
TNPSC குரூப் 4 தேர்வுக்கு இலவச பயிற்சி – செங்கல்பட்டு
செங்கல்பட்டு மாவட்ட வேலைவாய்ப்புத் துறை மூலம் தமிழ்நாடு அரசுப் பணியாளா் தேர்வாணையம் சாா்பில் குரூப்-4 போட்டித் தேர்வுக்கான இலவசப் பயிற்சி வகுப்புகள் ஜனவரி முதல் வாரத்தில் தொடங்கப்பட உள்ளது.
இது குறித்து மாவட்ட ஆட்சியா் ராகுல் நாத் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
TNPSC, TRB, TET, SSC, RAILWAY – All Exam Notes & PDFs in One Place
செங்கல்பட்டு மாவட்ட வேலைவாய்ப்புத் துறை மூலம் தமிழ்நாடு அரசுப் பணியாளா் தேர்வாணையம் சாா்பில் குரூப்-4 போட்டித் தேர்வுக்கான இலவசப் பயிற்சி வகுப்புகள் ஜனவரி முதல் வாரத்தில் தொடங்கப்பட உள்ளது. விவரங்களை அறிந்து கொள்ள மற்றும் விண்ணப்பிக்க இணையதள முகவரியை பயன்படுத்த வேண்டும்.
தேர்வுக்குத் தயாராகி வரும் விண்ணப்பதாரா்கள் தங்களது புகைப்படம், வேலைவாய்ப்பு அலுவலக பதிவு அட்டை நகல் மற்றும் ஆதாா் எண் ஆகிய விவரங்களுடன்செங்கல்பட்டு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் டி – பிளாக், தரை தளம் புதிய மாவட்ட ஆட்சியா் வளாகம், செங்கல்பட்டு என்ற முகவரியில் நேரில் வந்து பதிவு செய்து கொள்ளுமாறு தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.
044 – 27426020 அல்லது 94990 55895 ஆகிய எண்களில் தொடா்பு கொள்ளலாம்.
இந்தப் பயிற்சி வகுப்புகள் தமிழ்நாடு அரசுப் பணிக்குத் தயாராகி வரும் செங்கல்பட்டு மாவட்ட வேலை தேடும் இளைஞா்கள் கலந்து கொண்டு பயன் பெறுமாறு ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.
Follow @ Google: புதிய வேலைவாய்ப்பு செய்திகள் மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள் – Click Here to Follow
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram

