TN TRB Press Release – TN TRB SGT தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு!
TN TRB Press Release – TN TRB SGT தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு!
தமிழக கல்வி நிறுவனங்களில் காலியாக உள்ள இடைநிலை ஆசிரியர் பணிக்கென ஒதுக்கப்பட்டுள்ள 1768 பணியிடங்கள் குறித்த அறிவிப்பானது ஆசிரியர் தேர்வு வாரியம் (TN TRB) வாயிலாக 09.02.2024 அன்று வெளியிடப்பட்டது. இப்பணிக்கு தகுதியான நபர்கள் TN TRB SGT 2024 என்னும் போட்டித் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என்றும் இதில் கூறப்பட்டு இருந்தது. இத்தகைய தேர்வுக்கு இணைய வழியில் விண்ணப்பிக்க 15.03.2024 அன்று வரை கால அவகாசம் வழங்கப்பட்டு இருந்தது. தற்போது இக்கால அவகாசம் முடிவடைய உள்ள நிலையில் பல விண்ணப்பதாரர்கள் கால அவகாசத்தை நீட்டிக்குமாறு கோரிக்கை விடுத்தனர்.
அவர்களது கோரிக்கைக்கு இணங்க ஆசிரியர் தேர்வு வாரியம் தனது அதிகாரப்பூர்வ வலைதள பக்கமான https://www.trb.tn.gov.in/ -ல் புதிய அறிக்கை ஒன்றை விடுத்துள்ளது. இந்த அறிக்கையின் படி, விண்ணப்பிக்க மார்ச் 15 வரை வழங்கப்பட்ட கால அவகாசம் மார்ச் 20 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும் விண்ணப்பங்களில் திருத்தம் செய்ய 21.03.2024 அன்று முதல் 23.03.2024 அன்று வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. எனவே இத்தேர்வுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள மற்றும் 12ம் வகுப்பு + Diploma / B.EL.Ed, Graduate Degree + B.Ed முடித்த நபர்கள் கிடைத்த இந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
உங்களிடம் உள்ள PDF Files XEROX வேண்டுமென்றாலும் தொடர்பு கொள்ளவும் (Whatsapp): +91 80720 26676 – 1 Page (50 Paise Only)
Follow @ Google: புதிய வேலைவாய்ப்பு செய்திகள் மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள் – Click Here to Follow