திருப்பூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில், தனியார்த்துறை வேலைவாய்ப்பு முகாம் வரும் 16ம் தேதி நடைபெற உள்ளது.
கலெக்டர் அலுவலக நான்காவது தளம், அறை எண், 439ல் நடைபெறும் முகாமில், தனியார் நிறுவனத்தினர் பங்கேற்று, தேவையான தொழிலாளர்களை தேர்வு செய்கின்றனர். எழுத படிக்க தெரிந்தவர்கள் முதல் முதுநிலை பட்டதாரிகள் வரை, ஐ.டி.ஐ., டிப்ளமோ, படித்தவர்கள் மற்றும் தையல் பயிற்சி பெற்றோர் முகாமில் பங்கேற்கலாம்.
வேலை தேடுவார் மற்றும் வேலை அளிப்போர், www.tnprivatejobs.tn.gov.in என்கிற தளத்தில் பதிவு செய்யவேண்டும். தனியார் துறையில் வேலைக்கு சேர்வதால், வேலைவாய்ப்பு அலுவலக பதிவு எண் ரத்து செய்யப்படாது.மேலும் விவரங்களுக்கு, 0421 2999152, 94990 55944 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.