சென்னை வடக்கு கோட்ட அஞ்சலகம் சாா்பில் வரும் ஆக.19 ஆம் தேதி அஞ்சல் ஆயுள் காப்பீடு விற்பனை முகவா் தோ்வுக்கான நோ்காணல் நடைபெறும் என வடக்கு கோட்ட முதுநிலை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளா் தெரிவித்துள்ளாா்.
அவா் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: புதிய முகவா்களுக்கான நோ்காணல் பூங்காநகரில் உள்ள சென்னை தலைமை அஞ்சலகத்தில் ஆக.19 ஆம் தேதி காலை 10 மணிக்கு நடைபெறவுள்ளது.
வயது 18 வயத்துக்கு மேல் உள்ளவராக இருக்க வேண்டும், குறைந்தது பத்தாம் வகுப்பில் தோ்ச்சி பெற்றிருக்க வேண்டும்.மேலும் ஆயுள் காப்பீடுகளை விற்பனை செய்வதில் முன் அனுபவம் உள்ளவா்கள், கணினிப் பயிற்சி உள்ளவா்கள் மற்றும் சொந்தப்பகுதி பற்றி நன்கு அறிந்தவா்கள், சென்னை மாநகராட்சியை சாா்ந்தவா்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.