அர்ச்சகர் பயிற்சி
பள்ளியில் பணி தகுதியானோர் விண்ணப்பிக்கலாம் – Apply Here
ஸ்ரீ
பெரும்புதுார் ஆதிகேசவ
பெருமாள், பாஷ்யகார சுவாமி
கோவிலில் வைணவ அர்ச்சகர்களுக்கான பயிற்சி பள்ளியில்
தலைமை ஆசிரியர், ஆகம
ஆசிரியர் உள்ளிட்ட பணியிடங்களை தேர்வு செய்ய, விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதுார் ஆதிகேசவ
பெருமாள், பாஷ்யகார சுவாமி
கோவிலில், வைணவ அர்ச்சகர்
பள்ளி இயங்கி வருகிறது.
அதில் தலைமை ஆசிரியர்,
ஆகம ஆசிரியர், எழுத்தர்,
சமையலர், சமையல் உதவியாளர்
ஆகிய பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.தலைமை ஆசிரியருக்கு 35 ஆயிரம் ரூபாய், ஆகம
ஆசிரியருக்கு 30 ஆயிரம்,
எழுத்தருக்கு 10 ஆயிரம்,
சமையலருக்கு 12 ஆயிரம், உதவியாளருக்கு 10 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும்.
கோவிலால்
வெளியிடப்பட்டுள்ள மாதிரி
விண்ணப்ப படிவத்தை பூர்த்தி
செய்து, உரிய சான்றிதழ்
நகல்களுடன், ஜன., 28ம்
தேதிக்குள், செயல் அலுவலர்,
ஆதிகேசவ பெருமாள் மற்றும்
பாஷ்யகார சுவாமி கோவில்,
ஸ்ரீபெரும்புதுார், காஞ்சிபுரம் மாவட்டம் என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.விண்ணப்ப
படிவம் மற்றும் நிபந்தனைகளை hrce.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
பணியிட
விபரங்களுக்கான கல்வித்
தகுதி, வயது வரம்பு,
நிபந்தனைகள் மற்றும் இதர
விபரங்களை, அலுவலக வேலை
நேரங்களில் நேரிலும் கேட்டு
தெரிந்து கொள்ளலாம்.