பள்ளி மாணவா்களுக்கு திருக்குறள் நன்னெறிப் பயிற்சி
டாப்லைட்
அறக்கட்டளை, திருக்குறள் உலகம்
கல்விச்சாலை சார்பில் பள்ளி
மாணவ, மாணவிகளுக்கான திருக்குறள் நன்னெறி பயிற்சி வகுப்பு
நடைபெறுகிறது. பல்லடம்
வட்டம் குன்னங்கல்பாளையம் சாமத்தோட்டத்தில் உள்ள நாச்சிமுத்து நினைவு நூலகத்தில் பிப்ரவரி
22ஆம் தேதி காலை
10.30 முதல் 11.30 மணி வரையில்
இந்த பயிற்சி வகுப்பு
நடைபெறுகிறது.
இந்தப்
பயிற்சி வகுப்பில் 3 வயதுக்கு
மேற்பட்ட மாணவ, மாணவிகள்
இலவசமாகப் பங்கேற்கலாம். இறுதியாக
திருக்குறள் நன்னெறிச் செல்வா்,
திருக்குறள் நன்னெறிச் செல்வி
சான்றிதழ் வழங்கப்படவுள்ளது.
இதுதொடா்பான கூடுதல் விவரங்களுக்கு திருக்குறள் ஆய்வாளா் திருக்குறள் கி.கணேசனை
9994892756, டாப்லைட் நூலக ஒருங்கிணைப்பாளா் பி.மணிநாதனை
9943948156 என்ற கைப்பேசி எண்களில்
தொடா்பு கொள்ளலாம்