HomeBlogபுதிய அரசு கலைக் கல்லுாரிகளில் தமிழ் பட்டப்படிப்பு இல்லை

புதிய அரசு கலைக் கல்லுாரிகளில் தமிழ் பட்டப்படிப்பு இல்லை

TAMIL MIXER EDUCATION.ன்
தமிழக
செய்திகள்

புதிய அரசு
கலைக்
கல்லுாரிகளில் தமிழ் பட்டப்படிப்பு இல்லை

தமிழ்
மொழிக்கு முக்கியத்துவம் வழங்குவதாக கூறி வரும் தமிழக
அரசு, புதிதாக துவங்கப்பட்ட அரசு கலை அறிவியல்
கல்லுாரிகளில், இளங்கலை
தமிழ் பட்டப்படிப்பை துவங்காமல் உள்ளது.

கடந்த
மாதம் ஒரே நாளில்,
20
இடங்களில் புதிய அரசு
கலை அறிவியல் கல்லுாரிகளை, முதல்வர் ஸ்டாலின் காணொலியில் திறந்து வைத்தார். புதிதாக
துவங்கப்பட்ட அரசு
கலை அறிவியல் கல்லுாரியில், இளங்கலை தமிழ் பட்டப்படிப்பு துவங்கப்படவில்லை என,
அதிருப்தி நிலவுகிறது.

தமிழ் ஆர்வலர்கள் சிலர் கூறியதாவது:

தமிழ்த்
துறையில் பணியமர்த்தப்பட்டுள்ள ஆசிரியர்கள், மொழிப்பாடமாக உள்ள
தமிழ் பாடத்தை மட்டுமே
கற்பிக்கின்றனர்.

தமிழ்
பாடத்தில், இளங்கலை, முதுகலை
மற்றும் ஆராய்ச்சி படிப்பு
படிக்க விரும்பும் மாணவ,
மாணவியரின் எண்ணம் நிறைவேறாமல் உள்ளது. தமிழ் மொழியை
ஊக்குவிப்பதாக கூறும்
அரசு, புதிய அரசு
கலை அறிவியல் கல்லுாரியில் தமிழ் பாடப்பிரிவை தனியாக
ஏற்படுத்த வேண்டும்.

இளங்கலை,
முதுகலை மற்றும் ஆராய்ச்சி
படிப்பு வரை தமிழ்
மொழிக்கு முக்கியத்துவம் வழங்க
வேண்டும்.

தமிழ்நாடு வேலைவாய்ப்பு குரூப்பில் இணைய: Click Here

Follow @ Google: புதிய வேலைவாய்ப்பு செய்திகள் மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள் – Click Here to Follow

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular