ஆதார் விபரங்களை
இணைக்க இன்னும் 3 நாட்களே உள்ளது
தமிழகம்
முழுவதும் அரசு துறைகளில்
காலியாக உள்ள பணியிடங்கள் அனைத்தும் TNPSC தேர்வாணையம் நடத்தும் போட்டி தேர்வுகள்
மூலமாக நிரப்பப்படுகிறது.
கடந்த
வருடம் கொரோனா காரணமாக
அனைத்து போட்டித் தேர்வுகளும் நிறுத்தி வைக்கப்பட்டது. தற்போது
தொற்று குறைந்து வருவதால்
இந்த வருடத்துக்கான தேர்வு
கால அட்டவணையை தேர்வாணையம் வெளியிட்டது. அதில் குரூப்
2 தேர்வுக்கான அறிவிப்பு இந்த
மாதம் வெளியாகும் எனவும்
குரூப் 4 தேர்வுக்கான அறிவிப்பு
அடுத்த மாதம் வெளியாகும் எனவும் தெரிவிக்கப்பட்டது.
அந்த
வகையில் குரூப் 2 தேர்வுக்கான அறிவிப்பை சமீபத்தில் TNPSC
தேர்வாணையம் தெரிவித்துள்ளது. அதாவது
குரூப் 2 தேர்வு வரும்
மே மாதம் 21ம்
தேதி நடைபெறும் என்று
அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த
போட்டி தேர்வுகளில் ஏற்படும்
முறைகேடுகளை தடுப்பதற்கு பல்வேறு
நடவடிக்கைகளை TNPSC
மேற்கொண்டு வருகிறது. அதிலும்
குறிப்பாக TNPSC தேர்வாணையத்தால் நடத்தப்படும் அனைத்து
போட்டி தேர்வுகளிலும் தமிழ்
தகுதி தாள் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இவற்றில் 40 மதிப்பெண்கள் பெறுபவர்களுக்கு மட்டுமே
அடுத்த நாள் மதிப்பீடு
செய்யப்படும்.
மேலும்
இது குறித்து மற்றொரு
அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது. அதன்படி TNPSC தேர்வாணையம் நடத்தும் போட்டி தேர்வுகளில் நம்பகத்தன்மையை மேம்படுத்துவதற்கு தேர்வர்களின் ஒருமுறை
நிரந்தரப்பதிவு கணக்கு
வைத்திருப்பவர்கள் அனைவரும்
தங்களின் ஆதார் விபரங்களை
இணைக்க வேண்டும் என்று
தெரிவிக்கப்பட்டு உள்ளது.
அதுமட்டுமல்லாமல் இதற்கான கால
அவகாசம் வருகிற 28ம்
தேதியுடன் முடிவடைகிறது. இந்த
கால அவகாசம் முடிய
இன்னும் 3 நாட்களே இருப்பதால் தேர்வர்கள் அனைவரும் விரைவாக
தங்கள் ஆதார் விவரங்களை
இணைக்கும்படி கேட்டுக்
கொள்ளப்படுகிறார்கள்.