பிப்.1-ம்
தேதி முதல் தட்டச்சு
மையங்கள் செயல்படும்
இது தொடா்பாக தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
ஊரடங்கில்
தளா்வு அளிப்பது தொடா்பாக
தமிழக அரசு வெளியிட்ட
அறிவிப்பில், தொழில்பயிற்சி மையங்கள்,
பயிற்சி நிலையங்கள் நிலையான
வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்றி
பிப்.1ம் தேதி
முதல் செயல்பட அனுமதிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி
இத்துறையின் கீழ் அங்கீகாரம் பெற்று செயல்பட்டு வரும்
அனைத்து தட்டச்சு பயிலகங்களும் அரசால் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையான
வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்றி
பிப்.1ம் தேதி
முதல் செயல்பட அனுமதி
வழங்கப்படுகிறது.