பத்தாம் வகுப்பு,
பிளஸ் 2 திருப்ப தேர்வு
அட்டவணை
பத்தாம்
வகுப்பு மற்றும் பிளஸ்
2 வகுப்புகளில் படித்து
வரும் மாணவர்களுக்கு ஜனவரி
மற்றும் மார்ச் மாதங்களில் இரண்டு திருப்பத் தேர்வுகள்
நடத்தப்பட உள்ளன. அதற்கான
தேர்வு அட்டவணையை தேர்வுத்துறை வெளியிட்டுள்ளது.
இது குறித்து அரசுத் தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ள அறிவிப்பு:
நடப்பு
2021-2022ம் கல்வி ஆண்டில்
10 மற்றும் பிளஸ் 2 வகுப்புகளில் படித்து வரும் மாணவர்களின் அடைவுத் திறனை சோதிக்கும் வகையில் ஜனவரி, மார்ச்
மாதங்களில் முதல் மற்றும்
இரண்டாம் திருப்பத் தேர்வுகள்
நடத்தப்பட உள்ளன. இதன்
படி முதல் 10ம்
வகுப்புக்கான முதல்
திருப்பத் தேர்வு ஜனவரி 19ம் தேதி
தொடங்கி 27ம் தேதி
வரையும், இரண்டாம் திருப்பத்
தேர்வு மார்ச் 21ம்
தேதி தொடங்கி 26ம்
தேதி வரையும் நடக்கும்.
காலை
10 மணிக்கு தேர்வு தொடங்கி
மதியம் 1மணி வரை
நடக்கும். பிளஸ் 2 வகுப்புக்கான முதல்
திருப்பத் தேர்வு ஜனவரி
19ம் தேி தொடங்கி
28ம் தேதி வரையும்,
இரண்டாம் திருப்பத்தேர்வு மார்ச்
21ம் தேதி தொடங்கி
29ம் தேதி வரை
நடக்கும். இந்த தேர்வுகள்
மதியம் 2 மணிக்கு தொடங்கி
மாலை 5 மணி வரை
நடக்கும்.