தமிழக பள்ளி
மாணவர்கள் All Pass அறிவிப்பு
CBSE.க்கு பொருந்துமா??
தமிழகத்தில் உள்ள 9, 10 மற்றும் 11ம்
வகுப்பு மாணவர்கள் அனைவரும்
தேர்வின்றி தேர்ச்சி பெற்றதாக
அறிவிக்கப்பட்ட நிலையில்
இந்த அறிவிப்பு சிபிஎஸ்சி
மாணவர்களுக்கும் பொருந்துமா? என்ற கேள்வி பெற்றோர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
12ம்
வகுப்பு பொதுத்தேர்வுகள் மே
3ம் தேதி முதல்
நடக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 10 மற்றும் 11ம்
வகுப்புக்கான தேர்வுகள்
சட்டமன்ற தேர்தலுக்கு பின்னர்
அறிவிக்கப்படும் என்று
கூறப்பட்டது. இன்று திடீர்
அறிவிப்பாக தமிழக முதல்வர்
நடப்பு ஆண்டில் 9, 10, 11ம்
வகுப்பு மாணவர்கள் அனைவரும்
தேர்வின்றி தேர்ச்சி பெற்றதாக
அறிவித்தார்.
தமிழக
அரசின் இந்த அறிவிப்பால் மாணவர்கள் அனைவரும் மகிழ்ச்சியில் ஆழ்ந்தனர். மேலும், இந்த
அறிவிப்பு CBSE மாணவர்களுக்கும் பொருந்துமா என்று பெற்றோர்கள் மத்தியில் கேள்வி எழுந்துள்ளது. இதற்கு தமிழக கல்வித்துறை அதிகாரிகள், தமிழக பாடத்திட்டத்தில் பயிலும் மாணவர்களுக்கு மட்டுமே இந்த அறிவிப்பு
பொருந்தும் என்று விளக்கம்
அளித்துள்ளனர்.