தமிழக வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு ரூ.600
உதவித்தொகை
தமிழகத்தில் உள்ள படித்த வேலைவாய்ப்பு கிடைக்காத இளைஞர்களுக்கு தமிழக
அரசு உதவித்தொகை வழங்குவது
குறித்து கோவை மாவட்ட
வேலைவாய்ப்பு அலுவலக
துணை இயக்குனர் ஆ.ஜோதிமணி
அவர்கள் அறிவிப்பு ஒன்றை
வெளியிட்டுள்ளார்.
தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் மாவட்ட வேலைவாய்ப்பு மையங்களை
அமைத்து தமிழகத்தில் உள்ள
வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பினை அரசு
ஏற்படுத்தி கொடுக்கிறது. இதற்காக
மாநிலம் முழுவதும் உள்ள
வேலைவாய்ப்பு அலுவலகங்களில் தனியார் மற்றும் அரசு
வேலைவாய்ப்பு முகாம்கள்
தொடர்ந்து நடத்தப்படுகிறது.
வேலைவாய்ப்பு அலுவலகத்தில் தங்களின்
கல்வித்தகுதியை பதிந்து
ஐந்து வருடங்கள் நிறைவு
பெற்றும் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு தமிழக அரசு மாதம்
தோறும் உதவித்தொகை வழங்கி
வருகிறது. இந்நிலையில் கோவை
மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் இந்த உதவித்தொகை திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம்.
அதன்படி,
10-ம் வகுப்பு தேர்ச்சி
பெறாதவர்களுக்கு ரூ.200,
10-ம் வகுப்பு தேர்ச்சி
பெற்றவர்களுக்கு ரூ.300,
பிளஸ் 2 தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.400, பட்டதாரி மற்றும்
முதுநிலைப் பட்டதாரிகளுக்கு ரூ.600
வழங்கப்பட்டு வருகிறது.
SC/ST பிரிவினர் 45 வயதுக்கு மிகாமலும்,
மற்ற பிரிவினர் 40 வயதுக்கு
மிகாமலும் இருக்க வேண்டும்.
மாற்றுத்திறனாளிகளுக்கு ஓராண்டு முடிவடைந்திருக்க வேண்டும். ஆண்டு
வருமானம் ரூ.72,000க்கு
மிகாமல் இருக்க வேண்டும்.
உதவித்தொகை பெறுவதற்கு www.tnvelaivaaippu.gov.in என்ற
இணையதளத்தில் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.