
10வது தேர்ச்சியடைந்து, 18 வயது நிரம்பியவர்களுக்கு இலவசமாக வீடியோ எடிட்டிங் பயிற்சியை வழங்க அரசு முடிவெடுத்து, அறிவித்துள்ளது.
இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கும் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வரும் தமிழக அரசு. சென்னையில் முனைவோர் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 10 நாட்கள் திருமண புகைப்படம் மற்றும் வீடியோ எடிட்டிங் பயிற்சி நடத்த உள்ளது. அதன்படி வரும் மார்ச் 25ம் தேதி முதல் ஏப்ரல் 4ம் தேதி வரை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை இந்த பயிற்சி வகுப்புகள் நடைபெற உள்ளது.
TNPSC, TRB, TET, SSC, RAILWAY – All Exam Notes & PDFs in One Place
18 வயது பூர்த்தி அடைந்த அனைவருமே விண்ணப்பித்து பயனடையலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறைந்தபட்சம் 10 ம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். இதில் பயன்பெற விரும்புபவர்களுக்கு குறைந்த வாடகையில் தங்கும் வசதியும் உருவாக்கி தரப்படும் என அறிவித்துள்ளது.
மேலும் இது குறித்த தகவல்களை தெரிந்து கொள்ள https://www.editn.in/ அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் அறிந்து கொள்ளலாம். இந்த பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் 8668108141 அல்லது 8668102600 என்ற எண்ணில் அழைத்து முன்பதிவு செய்து கொள்ளலாம். அரசு சான்றிதழும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இளைஞர்களே இந்த வாய்ப்பை உடனே பயன்படுத்திக்கோங்க!

🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram

