Home Blog தமிழ்ப்படித்தவர்கள், கலப்புத் திருமணம் செய்தவர்களுக்கு அரசு வேலைவாய்ப்பில் முன்னுரிமை

தமிழ்ப்படித்தவர்கள், கலப்புத் திருமணம் செய்தவர்களுக்கு அரசு வேலைவாய்ப்பில் முன்னுரிமை

0

தமிழ்ப்படித்தவர்கள், கலப்புத் திருமணம் செய்தவர்களுக்கு அரசு வேலைவாய்ப்பில் முன்னுரிமை

தமிழ்ப்படித்தவர்கள், கலப்புத்
திருமணம் செய்தவர்களுக்கு அரசு
வேலைவாய்ப்பில் முன்னுரிமை

அரசு
வேலைவாய்ப்புகளில் முன்னுரிமையானது, 1970ம் ஆண்டு
கொண்டு வரப்பட்ட அரசாணையின் அடிப்படையில் வழங்கப்பட்டு வருகிறது.

இந்த
நிலையில், சுமார் 50 ஆண்டுகளுக்கு பிறகு இந்த அரசாணையில் தமிழக அரசு சில
மாற்றங்களை மேற்கொண்டுள்ளது.

அதன்படி,
கொரோனா தொற்றினால் பெற்றோரை
இழந்து வாடும் இளைஞர்களுக்கு அரசு வேலை வாய்ப்புகளில் முதல் முன்னுரிமை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதாவது,
பெற்றோரை இழந்து அரசு
மற்றும் தனியார் நடத்தும்
ஆதரவற்றோர் இல்லங்களில் வளர்ந்து
படித்தவர்கள் இதற்கு
தகுதியானவர்களாவர்.

அங்கீகரிக்கப்பட்ட ஆதரவற்றோர் இல்லங்களில் சேர முடியாத கிராமப்புற தாய், தந்தையற்ற நபர்கள்,
வருவாய் வட்டாட்சியர் மூலம்
பெறப்படும் சான்றிதழ் அடிப்படையிலும், முன்னுரிமை பெற தகுதி
உடையவர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

இதற்கு
அடுத்தபடியாக முதல்
தலைமுறை பட்டதாரிகள், தமிழக
அரசுப்பள்ளிகளில் தமிழ்
மொழியில் பயின்ற நபர்களுக்கு 2-வது மற்றும் 3-வது
முன்னுரிமை அளிக்கப்படும்.

போரில்
உடல் தகுதி இழந்த
முன்னாள் ராணுவத்தினர், வீரமரணம்
அடைந்த ராணுவத்தினரின் வாரிசுகள்,
ஆதரவற்ற விதவைகள் , கலப்பு
திருமண வாரிசுகள் உள்ளிட்ட
வழக்கமான வரிசைப்படி வேலைவாய்ப்பு முன்னுரிமை தொடரும்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

100
Xerox (1 page - 50p Only)
WhatsApp Group
Exit mobile version