
இலவச கணினி கணக்கியல் (Tally) பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்
தேனி கனரா வங்கி ஊரக சுயவேலை வாய்ப்பு பயிற்சி நிலையத்தில் டிச., 4 முதல் 2024 ஜன., 8 வரை இலவச கணினி கணக்கியல் (டேலி) பயிற்சி வழங்கப்பட உள்ளது.
பயிற்சிக்கு 18 வயது நிரம்பிய கிராமப்புற இளைஞர்கள் பங்கேற்கலாம். பயிற்சி காலை 9:30 மணி முதல் மாலை 5:30 மணி வரை வழங்கப்படும். பயிற்சியில் மதிய உணவு வழங்கப்படும்.
பயிற்சியில் தேர்ச்சி பெறுவோருக்கு சான்றிதழ், தொழில் துவங்கி ஆலோசனை வழங்கப்படும். பயிற்சியில் பங்கேற்க விருப்பமுள்ளவர்கள் புகைப்படம், ஆதார் நகல், ஆகியவற்றுடன் டிச., 4க்குள் தேனி தாலுகா அலுவலகம் எதிரே உள்ள கனரா வங்கி ஊரக சுயவேலை வாய்ப்பு பயிற்சி மையத்தில் முன்பதிவு செய்யலாம்.
மேலும் விவரங்களுக்கு 95003 14193 என்ற அலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என பயிற்சி நிலைய இயக்குனர் ரவிக்குமார் தெரிவித்துள்ளார்.
Follow @ Google: புதிய வேலைவாய்ப்பு செய்திகள் மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள் – Click Here to Follow
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google

