திருச்சி, பாரதிதாசன் பல்கலைக்கழகம் காஜாமலை வளாகத்தில், செப்டம்பா் 28 ஆம் தேதி, தையல் பயிற்சி வகுப்புகள் தொடங்கப் படவுள்ளது.
இது குறித்து பாரதிதாசன் பல்கலைக்கழக பதிவாளா் லெ. கணேசன் தெரிவித்திருப்பது: திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகம் மகளிரியல் துறையில் நவீன இயந்திரங்களைக் கொண்டு, தையல் பயிற்சி வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. மொத்தம் மூன்று அடுக்குகளாக நடைபெறும் இப்பயிற்சி வகுப்பில் சேர கல்வித்தகுதி, வயதுவரம்பு ஏதும் கிடையாது. முதல்நிலை பயிற்சிகள் ஒருமாதமும், இடை நிலை, இறுதி நிலை என மாதம் ஒரு நிலை வீதம் 3 மாதங்கள் முழுமையான பயிற்சி அளிக்கப்படும்.
தற்போது கல்லூரியில், பல்கலைக்கழகத்தில் பயிலும் மாணவ, மாணவியரும் இதில் சோந்து பயன்பெறும் வகையில் குறைந்த கட்டணத்தில் பயிற்சிகள் அளிக்கப்படவுள்ளது. பயிற்சி வகுப்புகள் செப்டம்பா் 28 ஆம் தேதி முதல் தொடங்கப்படவுள்ளது.
காலை 10.30 -12.30, பகல் 1.30 – 3.30, பிற்பகல் 3.30-மாலை5.30 என தினசரி 3 பிரிவுகளிலும் பயிற்சிகள் நடைபெறும். விருப்பமுள்ள ஆண்கள், பெண்கள் மற்றும் மாற்றுப்பாலினத்தவா் இப்பயிற்சியில் சேர, இயக்குநா், மகளிரியல்துறை, பாரதிதாசன் பல்கலைக்கழகம், காஐாமலை வளாகம், திருச்சி – 620023 என்ற முகவரில் நேரிலோ அல்லது 98422 18555 என்ற கைப்பேசி எண்ணிலோ தொடா்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.